

இந்தியன் ரெயில்வே பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளை எளிதாக்குதல் மற்றும் ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்தல் போன்ற பல நடவடிக்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் Lower Berth தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதாவது, மாநிலங்களவையில் ரெயில் பயணிகளுக்கான சலுகைகள் குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரெயில்வே மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுப்படுத்தியுள்ள வசதிகள் குறித்து குறிப்பிட்டார்.
அந்த வகையில் மூத்த குடிமக்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு Lower Berthகள் தானாகவே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்பதிவின் போது விருப்பமாக அதை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரை அடிப்படையில் அந்த வசதி அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 Lower Berthகள், 3rd ஏசியில் தலா 4 முதல் 5 Lower Berthகள், 2nd ஏசியில் ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 Lower Berthகள் என இதற்காக ஒதுக்கப்படும் என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரை ராஜ்தானி, சதாப்தி உள்பட அனைத்து அஞ்சல் மற்றும் விரைவு ரெயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
மேலும் ஸ்லீப்பர் வகுப்பில் 4 பெர்த்துகள், 3rd ஏசி, 3Eயில் 4 பெர்த்துகள் முன்பதிவு செய்யப்பட்ட 2-வது அமர்வில் 4 இருக்கைகள் அல்லது air conditioned chair காரில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு(divyangjan) ரெயில்களில் கிடைக்கும் வசதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் இருக்கும். அதில் அகலமான கதவுகள் மற்றும் ஆதரவுக்காக கூடுதல் கிராப் பார்களை கொண்ட பெரிய கழிவறைகள்(Bathroom Grab bars) இடம்பெற்றிருக்கும். வாஷ்பேஷன் மற்றும் கண்ணாடிகள் அவர்கள் அணுகக்கூடிய உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகள் வைக்க பார்க்கிங் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த பிரெய்லி அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறிப்பிட்டுள்ளார்.