

இந்திய ரயில்வேயின் ரயில் ஒன் செயலியில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ரயில்வே அமைச்சகம் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
ரயில் ஒன்(RailOne) செயலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடி உண்டு. டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்பொழுது 3% தள்ளுபடி அல்லது கேஷ்பேக் கிடைக்கும். இது ஜனவரி 14, 2026 முதல் ஜூலை 14, 2026 வரை அமலில் இருக்கும். தற்போது R-Walletக்கு மட்டுமே கேஷ்பேக் இருந்தது. இப்போது அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் வழியாகவும் இந்த 3% தள்ளுபடி கிடைக்கும்.
இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்திய ரயில்வேயின் புதிய திட்டமாகும். ரயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் ஒன் செயலியில் R-Walletடில் இருந்து டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அளிக்கப்படும் மூன்று பர்சன்ட் தள்ளுபடியும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்பதிவில்லா பயண சீட்டுகள் மட்டுமின்றி, பிளாட்பார்ம் டிக்கெட்களுக்கும் இந்த மூன்று பெர்சென்ட் தள்ளுபடி பொருந்தும். இந்த சலுகை ரயில் ஒன் செயலியில் மட்டுமே கிடைக்கும். ரயில் ஒன் செயலியைத் தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் செய்தாலும் இந்த ஆஃபர் கிடையாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்தி ரயில் ஒன் செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கி நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம்.