ராஜா ரவிவர்மாவின் மேஜிக்..! ஏலத்தில் ₹167 கோடிக்கு விற்பனை..!

ravi varma painting
ravi varma paintingsourceE:eenadu
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மா வரைந்த ஒரு ஓவியம், ₹167 கோடிக்கு விற்பனையாகி இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. நேற்று(ஏப்ரல்.1) அன்று மும்பையில் உள்ள சாஃப்ரோனார்ட்டின் ஸ்பிரிங் லைவ்வில் இந்த ஏலம் நடைபெற்றது. ராஜா ரவிவர்மாவால் வரையப்பட்ட இந்த ஓவியம் தாய் மற்றும் மகனின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. 

1890 களில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் யசோதை ஒரு பசுவிடமிருந்து பால் கறந்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் குழந்தை கிருஷ்ணர் ஒரு பால் கோப்பையை எடுக்க முயல்வதை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இந்த ஓவியம் ₹80 முதல் ₹120 கோடி வரை ஏலம் போகலாம் என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் , சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான சைரஸ் எஸ். பூனாவாலா ₹167.20 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

 கடந்த ஆண்டு ₹118 கோடிக்கு விற்பனையான எம்.எஃப்.உசைனின் கிராம யாத்ரா ஓவியம் தான் , இதுவரை ஏலம் போன ஓவியங்களில் அதிக மதிப்பு கொண்டதாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்..! - 'லீடர்' முதல் 'காளிதாஸ் 2' வரை; எதைப் பார்க்கலாம்?
ravi varma painting
logo
Kalki Online
kalkionline.com