இந்த வாரம் திரையரங்குகளில் 5 படங்கள் வெளியாகின்றன.அவற்றில் நான்கு தமிழ்ப்படங்கள்,ஒரு தெலுங்குப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது.
1. லீடர் (Leader) – ஆக்ஷன் திரில்லர்
லெஜெண்ட் சரவணன் நாயகன் ஆக நடிக்க துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் இது.இந்தப்படத்தின் டீசர் கட்,ட்ரெய்லர் கட் பார்க்கும்போது விஸ்வாசம் படத்தை பட்டி டிங்கரிங்க் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஏற்கனவே தெலுங்கில் சிரஞசீவி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மனசங்கர வரப்பிரசாத் காரு படமே விஸ்வாசம் படத்தை சுட்டு காமெடி கலந்து எடுத்த கதை தான்.இதில் ஆக்ஷன்,அடிதடி ,சண்டை என மசாலா சேர்த்து இருக்கிறார்கள் போலத்தெரிகிறது.
வில்லன் - நீ என்ன பெரிய ஹீரோவா?
ஹீரோ - எல்லாக்குழந்தைக்கும் அவங்கவங்க அப்பா ஹீரோ தாண்டா.கடவுள் நேரடியா யாருக்கும் உதவி செய்யறது இல்லை.மனிதர்கள் மூலமாத்தான் உதவுவார்.
வில்லன் -யார்றா அவங்க மேல கையை வெச்சது?போலீசா?மிலிட்ரியா?கேங்க்ஸ்டரா?நேவியா?
அடியாள் - அப்பாண்ணே.நாம கடத்தி வெச்சிருக்கும் பொண்ணோட அப்பா
கடத்தப்பட்ட தன் மகளை மீட்க நாயகன் நடத்தும் ஆக்ஷன் வேட்டைதான் கதை என்பதை யூகிக்க முடிகிறது.போலீஸ் ,கேங்க்ஸ்டர் என இரு தரப்புக்களையும் எதிர்த்து நாயகன் ஒற்றை ஆளாகப்போராடுகிறார் போல. 12B புகழ் ஷாம் ,ஆயிரத்தில் ஒருவன் புகழ் ஆண்ட்ரியா,பாயல் ராஜ்புத்,சந்தோஷ் பிரதாப்,மலையாள நடிகர் லால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.
2. காளிதாஸ் பாகம் 2 – சஸ்பென்ஸ் திரில்லர்
பரத் போலீஸ் ஆபீசர் ஆக நடித்திருக்கும் படம் இது.முதல் பாகக்கதைக்கும் ,இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.இது தனிக்கேஸ்.
நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை ஒரு சீரியல் கில்லர் தான் செய்கிறான் என்று சந்தேகப்பட்டு நாயகன் அந்த வழக்கை விசாரிக்க வருகிறார்.அரக்க வேட்டை என்று பிராஜெக்ட்க்கு பெயர் சூட்டப்படுகிறது.வில்லன் பெயர் ஸ்டீபன்.இவன் செய்யும் குற்றஙகள் என்ன?ஏன் செய்கிறான் என்பதை துப்பு துலக்குவது தான் கதை.ட்ரெய்லர் பிரமாதமாக வந்திருக்கிறது.
ரசித்த சில வசனங்கள் :
1. இங்கே நடக்கும் எல்லாப்பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டா?தெரியாது.எல்லா குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கிறதா?என்றால் ஒரு சிலரால் அதுவும் கிடைப்பதில்லை.
2.ஒரு மனுசனை சாகடிக்கறது அவனுக்கான தண்டனைன்னு நினைக்கிறோம்.ஆனா அது அவனுக்கான விடுதலை.
3. நான் நல்லவனுக்கு ஒரு படி கீழேயும்,கெட்டவனுக்கு ஒரு படி மேலேயும்
ஒரு அபார்ட்மெண்ட்டில் மித்ரா என்ற பெண் காணாமல் போகிறாள்.ரெகுலராகக்கொலை செய்யும் சீரியல் கில்லர் வேலையா?வேறு யாரோவா?என்பதை நாயகன் விசாரித்து கண்டுபிடிப்பதுதான் கதை, இதில் பிரகாஷ் ராஜ் போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார்.அவர் போக பவானி ஸ்ரீ,அபர்நதி,சுரேஷ் சந்திரமேனன்,அஜய் கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு பிரமாதம்.லொக்கேஷன்கள் கலக்கல் ரகம்.
3. நீளிரா – மெலோ டிராமா
கார்த்திக் சுப்புராஜ் + ராணா டகுபதி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் .நவீன் சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் சோமீதரன் கதை எழுதி இயக்கி இருக்கிறார். 1988ல் இலங்கையில் நடந்த போரின் பின்னணியில் நடந்த உண்மை கதை. படத்தின் ட்ரெய்லர் கட் பார்க்கும்போது நாயகிக்கு திருமணம் நடக்க இருக்கும் சூழலில் போர் நடக்கிறது.திருமணம் நடக்குமா..? நடக்காதா..? என்ற கேள்வி எழும்போது முதலில் இந்த இரவு நாம் உயிருடன் இருப்போமா?தெரியலை என்ற பதில் வருகிறது.
ஒலி அமைப்பு மற்றும் பின்னணி இசை பிரமாதமாக வந்துள்ளது.
4. கார்மேனி செல்வம் – திரில்லர்
இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ள படம்.
நாயகன் ஒரு கார் டிரைவர்.நடுத்தரக்குடும்பம்.சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது இவர் கனவு. பணக்காரன் ஆக வாழ வேண்டும் எனில் கடன் வாங்கியாவது இஷ்டத்துக்கு செலவு செய்ய வேண்டும் என்பது இவர் பாலிசி.
மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்க நினைக்கிறார்.முதலாளியிடம் விசுவாசமான வேலைக்காரனாக இருந்த நாயகன் இதற்குப்பின் என்ன செய்தான்?லட்சியத்தை அடைந்தானா?என்பது மீதிக்கதை.
நாயகன் ஆக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.வழக்கமாக நேர்மையானவராக நடிக்கும் இவர் இந்தப்படத்தில் மோசடி வேலை செய்பவர் போல வருகிறார்.லட்சுமிப்ரியா,அபினயா,கார்த்திக் குமார்,படவா கோபி,முல்லை கோதண்டம், மற்றும் பலர் நடிக்க ராம் சக்ரி இயக்கி இருக்கிறார்.
இது. தமிழ் ,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என சொல்லப்பட்டாலும் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
5. பைக்கர் (Biker) – ஸ்போர்ட்ஸ் டிராமா
சர்வானந்த் மற்றும் மாளவிகா நாயர் ஜோடியாக நடிக்கும் ரொமாண்டிக் டிராமாவாக இருந்தாலும் மோட்டார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இந்தியாவில் வெளியாகும் முதல் படம் என்ற வாசகத்துடன் வருகிறது.இந்தப்படத்தில் நடிக்க சர்வானந்த் இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.ஒரு ரேஸ் வீரர் எப்படிக்கார் ஓட்டுவார்?அவரது உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை கற்றுக்கொண்டாராம்.படத்தை இயக்கி இருப்பவர் அபிலாஷ் கங்காரா
இதுதாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர், ஹிந்தி நடிகர் அதுல் குல்கர்னி ,பிரம்மாஜி இணைந்து நடித்த படம்.
மூன்று தலைமுறைகளில் என்ன என்ன மாற்றங்கள் பைக் ரேஸ் கண்டிருக்கிறது?என்பதை சொல்லும் ஸ்போர்ட்ஸ் டிராமா மூவி இது.ஆக்சன் ,காதல் கூட உண்டு.