மாநிலங்களவை தேர்தல்: தமிழக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு..!

rajyasaha election
rajyasaha election image source: dailythanthi
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்ய சபா தேர்தல் வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் திருச்சி சிவா , கனிமொழி சோமு, ஜி.கே வாசன் உள்ளிட்ட ஆறு பேரின் எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை ஒட்டி ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 16 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 16ம் தேதி நடக்கும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது.

திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப பெற, இன்று மாலை வரை, அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை.

இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Young Sherlock (2026) - க்ரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர்!
rajyasaha election
logo
Kalki Online
kalkionline.com