சோமேட்டோ, ஸ்விக்கிக்கு செக்..! களமிறங்கிய ரேபிடோவின் 'Ownly'..ஹோட்டல்களுக்கு 0% கமிஷன்..!

Rapido ownly
Rapido ownlyimage source: prameyanews.com
Published on

நகர போக்குவரத்துகளில் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக பைக் டாக்சி முறையை 2015 ஆம் ஆண்டு Aravind Sanka ,Pavan Guntupalli ,SR Rishikesh ஆகிய மூவர் கூட்டணியில் Rapido நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பெயர் “theKarrier” என்று இருந்தது; பின்னர் Rapido என்று மாற்றப்பட்டது. குறைந்த செலவில் நகரப் போக்குவரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த பைக் டாக்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Rapido நிறுவனம் வழங்கும் சேவைகள் :

மொபைல் ஆப்பில் அருகிலுள்ள பைக் ஓட்டுனரை (Captain) அழைத்து பயணம் செய்ய பைக் டாக்சி ( Bike Taxi) , ஆட்டோ ( Auto Booking) , கார் சர்வீஸ்(Cab Service) , பார்சல் டெலிவரி (Parcel Delivery), நிறுவனங்களுக்கு மொத்த டெலிவரி (logistics) சேவை என பல தளங்களில் கால் பதித்து தற்போது உணவு டெலிவரியிலும் (food delivery platform) புதிய சேவை முறையை புகுத்தி பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் உணவு ஆர்டர் பிரிவில் நுழைவதைக் குறிக்கும் வகையில், ரேபிடோ அதன் தனித்துவமான உணவு விநியோக செயலியான Ownly அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் Ownly என்ற பெயரில் சொந்தமாக தனது புதிய உணவு டெலிவரி செயலியை Rapido அறிமுகப்படுத்தியதன் மூலம் ஏற்கெனவே Zomato மற்றும் Swiggy போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய சந்தையில், Rapidoவின் இந்த புதிய முயற்சி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது இந்தியாவின் உணவு டெலிவரி சேவை food delivery சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சேவை இப்போது பெங்களூர் நகரம் முழுவதும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த தளம் பூஜ்ஜிய கமிஷன் கட்டமைப்பில் செயல்படுகிறது, அதாவது உணவக கூட்டாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்காது. அதற்கு பதிலாக, நுகர்வோருக்கு தளவாட செலவுகளை ஈடுகட்ட வடிவமைக்கப்பட்ட விநியோக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அணுகுமுறை உணவகங்கள் கமிஷன் சுமைகளை நிர்வகிக்கும் விதமாக தரும் தள்ளுபடிகள் அல்லது விளம்பரங்களை நம்பியிருக்காமல் நிலையான மெனு விலையை பராமரிக்க உதவுகிறது.

கடந்த பத்தாண்டுகளில், ஆன்லைன் உணவு ஆர்டர் செய்தலில் இந்தியா முழுவதும் நுகர்வு முறைகளை மறுவடிவமைத்துள்ளது, இது கண்டுபிடிப்பு மற்றும் விநியோகத்தை நெறிப்படுத்திய ஆன்லைன் தளங்களால் இயக்கப்படுகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் மெனு மார்க்-அப்கள், பிளாட்ஃபார்ம் கமிஷன்கள் மற்றும் அடுக்கு கட்டணங்கள் ஆகியவற்றால் பலவிதமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் விதமாக Ownly ஆப் இருக்கும் எனத் தெரிகிறது.

பூஜ்ய கமிஷன் நடவடிக்கை உணவகங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையே கமிஷன் மாதிரிகள் மற்றும் லாப அழுத்தங்கள் தொடர்பாக வளர்ந்து வரும் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக Ownly ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் தளவாடச் செலவுகளை ஈடுகட்ட வாடிக்கையாளர்களிடம் டெலிவரி கட்டணத்தை வசூலிக்கிறது. இது கூடுதல் பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் இல்லாமல் உணவகங்கள் குறைந்த மெனு விலைகளை வழங்க உதவுவதாக நிறுவனம் சார்பில் சொல்லப்படுகிறது.

மேலும் "இந்திய நுகர்வோர் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறி வருகின்றன. உணவு ஆர்டர் செய்வது இந்தியா முழுவதும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது, பெருநகரங்களில் மட்டுமல்ல சிறு சிறு நகரங்களிலும் கூட "என்றும் ரேபிடோ மற்றும் ஓன்லி நிறுவனர் அரவிந்த் சங்கா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த app Android-ல் மட்டுமே கிடைக்கிறது. iPhone (App Store) version இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிகிறது. முதலில் Bengaluru முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு

அதன் பிறகு டெல்லி மும்பை போன்ற (Delhi, Mumbai ) போன்ற பெருநகரங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவை சென்னைக்கு எப்போது வரும் என்பதை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! உங்க ரயில் 3 மணிநேரம் லேட்டா வரப்போகுது! முழு விபரம் உள்ளே!
Rapido ownly

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com