உலக பணக்காரர்களுள் ஒருவரான ரத்தன் டாடா ஏற்கனவே ஜாம்ஷத்பூர் என்ற நகரத்தை உருவாக்கினார். இந்தநிலையில், தற்போது தமிழகத்திலும் விரைவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கவுள்ளார்.
இந்திய பணக்காரர்களுள் ஒருவரான ரத்தன் டாடா 1990 முதல் 2012 வரை டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்தார். டாடா குழுமம் ஏராளமான பொது சேவைகளையும் செய்து வருகிறது. கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது. கல்விக்கும், மக்களின் மேம்பாட்டிற்கும் பல தொண்டுகளை செய்து வரும் டாடா குழுமம், தனது தொழிலும் இடைவிடாது கவனம் செலுத்தியே வருகிறது.
அந்தவகையில் டாடா குழுமம் ஜாம்ஷத்பூர் என்ற நகரத்தை முதலில் உருவாக்கியது. பல வசதிகளுடன் இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில் ஸ்டீல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மற்றொரு நகரத்தை டாடா உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தின் ஓசுர் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக இருந்து வருகிறது. ஓசூரில் ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது இந்த உற்பத்தியை விரிவுப்படுத்த டாடா குழுமம் முடிவெடுத்துள்ளது. ஆகையால், இரண்டு புதிய உற்பத்தி மையங்களை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆக, புதிதாக கட்டப்படும் நிறுவனங்களில் பணிபுரியவுள்ள பணியாளர்களுக்கு தங்கும் இடம் கட்ட ஒரு புதிய நகரத்தையே உருவாக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நகரத்தில் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் தேவையான வீடு கட்டித் தருவதாகவும், மேலும் சில உள்கட்டமைப்புகளும் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இதுகுறித்து பேசியுள்ளார். அதாவது, “ஜாம்ஷத்பூரையே முந்தும் அளவிற்கு ஓசுரில் வசதிகள் உள்ளன. இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாற்ற முடியும்.” என்றார்.