

முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார்.முதல்வர் விஜய் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடும் எதிப்புக்கிடையே ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு.தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் நியமனத்தை தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அரசு வாபஸ் பெற்றது.