குஜராத் தேர்தல்: பாஜக சார்பில் ஜடேஜா மனைவி போட்டி!

குஜராத் தேர்தல்: பாஜக சார்பில் ஜடேஜா மனைவி போட்டி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  

 குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாஜக, மீண்டும்  ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறது. அதேசமயம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸூம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ,பாஜக சார்பில் பல்வேறு பிரபலங்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. குஜராத்தின் ஜாம் நகர் வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக  அவரை பாஜக அறிவித்துள்ளது.

ரிவாபா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்திலிருந்து வந்தவர் ரிவாபா என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com