இனி ஒரே கிளிக்கில் புதிய வங்கிக்கு மாறலாம்! - உங்கள் லோன் முதல் இன்சூரன்ஸ் வரை தானாகவே மாறும்..!

ரிசர்வ் வங்கி 'பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்' எனப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on

இந்தியாவின் மைய வங்கியும், நிதி ஒழுங்குமுறை அமைப்புமான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், புகார்களை எளிதில் தீர்க்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக்கவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு சிம்சை மாற்றிக்கொள்ளும் வசதியை போலவே வங்கி கணக்குகளையும், அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை (Account Portability)அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிகள் இடையேயான பரிமாற்றத்தை எளிதாக்க ரிசர்வ் வாங்கி பரிசீலித்து வருகிறது. தற்போது ஆதார் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனையையும் மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 'பேமெண்ட்ஸ் விஷன் 2028' ஆவணத்தில் இந்த திட்டத்தின் முன்மொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையை செயல்படுத்த, 'Payments Switching Service' (PaSS) எனப்படும் புதிய தளத்தை ரிசர்வ் வங்கி (RBI) உருவாக்கி வருகிறது. இம்மையப்படுத்தப்பட்ட அமைப்பு ஒரு மையப்புள்ளியாகச் செயல்பட்டு, பயனர்கள் தங்கள் அனைத்துப் பணப்பட்டுவாடா ஆணைகளையும் (payment mandates) ஒரே இடத்தில் பார்வையிடவும் நிர்வகிக்கவும், அவற்றை வங்கிகளுக்கு இடையே தடையின்றி மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யும். இதன்மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சேவைகளை மாற்றும்போது உருவாகும் மிகப்பெரிய பிரச்சனைகளை களைய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்களிடம் வீட்டு கடன், வாகன கடன் உள்ளதா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சொன்ன குட் நியூஸ்..!
ரிசர்வ் வங்கி

இதன் மூலம், வாடிக்கையாளர் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, ​​அவர்களின் அனைத்து EMI-கள், SIP-கள், கடன் தவணைகள், இன்சூரன்ஸ் உள்ளிடவையும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும்.

பலர் முதலீடுகள், சம்பளக் கணக்குகள் மற்றும் அரசுத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், விருப்பமில்லாதபோதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் பழைய வங்கியிலேயே தொடர்ந்து கணக்கு வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இந்த தடைகளை நீக்கி வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதாவது பணம் செலுத்தும் வழிமுறைகளின் இடமாற்றத்தை எளிதாக்குவது... இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சிரமத்துடன் தங்கள் வங்கிக் கணக்குகளை மாற்றிக்கொள்ள வழிவகுப்பதாகும்.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறையால் வாடிக்கையாளர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கணக்கு விவரங்களை நேரடியாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது. அதேநேரம் இந்த செயல்முறையில் கணக்கு எண் மாறாவிட்டாலும், புதிய வங்கியின் IFSC குறியீடு மாறும்.

விஷன் 2028 திட்டம் வேகமான மற்றும் மலிவான சர்வதேச பணப் பரிமாற்றங்களையும் இலக்காகக் கொண்டுள்ளது. எல்லை தாண்டிய கொடுப்பனவுகளில் உள்ள ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்பத் தடைகளை நீக்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி தற்போதுள்ள அமைப்புகளை மறுஆய்வு செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
நகை கடன் வாங்கியிருப்போர் கவனத்திற்கு..! ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்..!
ரிசர்வ் வங்கி

ஜி20 நாடுகள் அமைத்த கட்டமைப்புகள் உள்ளிட்ட உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இந்தியா தனது பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை சீரமைத்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com