நாளை கடைசி நாள்..! டிப்ளமோ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை(செப்.28) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
indian oil corporation
indian oil corporation
Published on

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) என்பது இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாக உள்ளது. 1959-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், கச்சா எண்ணெய் மற்றும் தயாரிப்பு குழாய்கள், எண்ணெய் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்புத் திறன்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனம் தனது நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க நாளை(செப்.28) கடைசி நாள் என அறிவித்துள்ளது.

பணி: Junior Engineers

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி: பொறியியல் துறை அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோவில் படித்திருக்க வேண்டிய பிரிவுகள் பற்றி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கணினி வழித் தேர்வு அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உடனே விண்ணப்பீங்க..! இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
indian oil corporation

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.9.2025

மேலும் விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com