தங்கம் வைத்திருப்போர் எச்சரிக்கை: 12.5% வரி விதிக்கப்படும்? முழு விபரம் இதோ..!

நாம் வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும்.
Gold
Gold
Published on

தங்கம்... இந்தியாவில் தங்கம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரித்துடன் தொடர்புடையது. அந்த வகையில் நம் நாட்டில் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா என்ற எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் இதில் முக்கிய இடம் தங்கத்திற்கு உண்டு. அப்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள பெண்களிடம் அதிகளவு தங்கம் இருக்கும். அதாவது, திருமணத்திற்கு அம்மா வீட்டில் போடுவது, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பரிசாக வருவது, தாத்தா பாட்டி வழியில் வரும் பரம்பரை நகை, சேமித்து வைத்து வாங்குவது என்று கணக்கிட்டு பார்த்தால் இந்தியாவில் உள்ள பெண்களிடம் அதிகமாகவே தங்கம் இருக்கும்.

அந்த வகையில், இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி வெறும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல், ஒரு நம்பகமான முதலீட்டு விருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இனிவரும் காலங்களில் நம்மிடம் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு ஈடாக அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டி வருமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கம் இந்திய மக்களுக்கு கொடுத்துள்ள வாரிசுரிமை சலுகை மற்றும் திருமண பரிசு விலக்கு பற்றி நாம் தெரிந்து கொண்டால் நம்மிடமுள்ள தங்கத்தை நீங்க முழுமையாக காப்பாத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
Budget 2026: தங்கம் வாங்கும் முன் இதைப் பாருங்க.! எல்லாமே மாறப்போகுது.!
Gold

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது வாரிசுரிமை வரி (Inheritance Tax) இல்லை. 1985-ல் நீக்கப்பட்ட இந்த வரி, பெற்றோர் அல்லது உறவினர்களிடமிருந்து சொத்துக்களையோ, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையோ பெறும்போது, அதன் மீது வாரிசுதாரர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

இருப்பினும், அந்த நகைகளை விற்கும் போது கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% அல்லது உங்கள் வரி வரம்பு படி STCG வரி வசூலிக்கப்படும். இதற்கான முதலீட்டு காலம் என்பது முந்தைய உரிமையாளர் (எ.கா: உங்கள் பெற்றோர்) அந்த தங்கத்தை வாங்கிய தேதியிலிருந்தே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளி யாரிடம் இருந்து நமக்கு பரிசாக கிடைக்கிறது என்பதை பொறுத்து அதற்கு வரி விதிக்கப்படுமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். அதாவது திருமணம் அல்லது மற்ற விசேஷகங்களின் போது பெற்றோர், உடன் பிறந்தவர்கள், கணவரின் பெற்றோர், உறவினர்கள் என இவர்களிடம் இருந்து எவ்வளவு மதிப்புள்ள தங்கம் பெற்றாலும் அதற்கு வரி கிடையாது.

ஆனால் நண்பர்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து ஓராண்டில் நீங்கள் பெறும் மொத்த பரிசுகளின் மதிப்பு ரூ.50,000க்கு மேல் இருந்தால், அந்த முழு மதிப்பிற்கும் உங்கள் வருமான வரி வரம்பு (Slab Rate) படி வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் திருமணத்தின் போது உறவினர் அல்லது நண்பர்களிடமிருந்து பரிசாக பெரும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு முழுமையான வரி விலக்கு உண்டு.

வரி செலுத்தாமல் தப்பிக்க என்ன செய்யலாம்?

நல்ல செய்தி என்னவென்றால், வரிகளைச் சேமிப்பதற்கும் வழிகள் உள்ளன. தங்கம் அல்லது வெள்ளியை விற்பதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயம் கிடைத்தால், அந்தத் தொகையை ஒரு குடியிருப்புச் சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F-இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

இதையும் படியுங்கள்:
நகை வாங்குவோர் ஷாக்..! கதி கலங்க வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
Gold

ஆனால் அதிலும் சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது நீங்கள் உங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வரும் முழுத் தொகையையும் புதிய வீட்டிற்காக மட்டுமே செலவிட வேண்டும். மேலும் உங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்வதற்கு 1 ஆண்டுக்கு முன்போ அல்லது தங்கம் விற்பனை செய்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள்ளோ உங்கள் பெயரில் புதிய வீட்டை வாங்கியிருக்க வேண்டும். புதிய வீடு கட்டுவதாக இருந்தால், தங்கத்தை விற்பனை செய்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். மேலும் தங்கம் விற்பனை செய்த பணத்தில் வாங்கிய புதிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கவும் கூடாது.

அதேபோல் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த சலுகையை அதிகபட்சம் ரூ.10 கோடி வரையிலான முதலீட்டிற்கு மட்டுமே பொருந்தும் மற்றும் நீங்கள் தங்கத்தை விற்பனை செய்யும் தேதியில், உங்கள் பெயரில் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட வீடு இருக்க கூடாது.

தங்கப் பத்திரங்களுக்கான விதிகள் :

முதலீட்டாளர் தங்கம் அல்லது வெள்ளியை விற்கும்போது மூலதன ஆதாய வரி பொருந்தும். நீங்கள் தங்கம் அல்லது வெள்ளியை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, 12.5% ​​வரி விதிக்கப்படும். 24 மாதங்களுக்குள் விற்றால், அது குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி வரம்பின்படி வரி விதிக்கப்படும்.

முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரங்களுக்கான (SGBs) விதிகள் சற்றே வேறுபட்டவை. அவற்றில் ஈட்டப்படும் 2.5% ஆண்டு வட்டிக்கு முழுமையாக வரி உண்டு. இருப்பினும், முதலீட்டாளர் 8 வருட முதிர்வு காலத்தில் பத்திரத்தை மீட்டெடுத்தால், மூலதன ஆதாயம் முழுமையாக வரி விலக்கு பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : குட் நியூஸ்..! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.7,600 சரிவு..!
Gold

12 மாதங்களுக்குள் விற்றால், வரி வரம்பின்படி வரி விதிக்கப்படும், அதே சமயம் 12 மாதங்களுக்குப் பிறகு விற்றால் 12.5% ​​நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். ஒரு முதலீட்டாளர் ரூ.2 லட்சம் லாபம் ஈட்டி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீட்டை விற்றால், அவர் சுமார் ரூ.36,400 வரை கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று வரி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com