

பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதிவுத்துறையின் இணையதளம் (https://tnreginet.gov.in)பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்திற்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் 21-01-2026 (புதன்கிழமை) இரவு 7 மணியிலிருந்து 22-01-2026 (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம் (Citizen Portal) செயல்படாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கூறிய இரண்டு தினங்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 22-01-2026 அன்று பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் இணையதளம் (Citizen Portal) குறிப்பிட்ட நேரத்தில் செயல்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.