

இந்திய டெலிகாம் சந்தையில் 524 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய மொபைல் மற்றும் முன்னணி டிஜிட்டல் இணைப்பு சேவை வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), நீண்டகால பயனர்களுக்காக தற்போது ரூ. 10,000 விலையில் மூன்று ஆண்டுகளுக்கான அன்லிமிட்டெட் கனெக்டிவிட்டி வசதி கொண்ட பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 7, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள இந்த பிரம்மாண்ட திட்டத்தின் முழு விவரங்கள் இதோ:
கடந்த 2015-ல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் பீட்டா சோதனை பயன்பாட்டுக்கு வந்தது. 2016-ல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. அது முதல் இந்திய டெலிகாம் துறையில் புதிய பாய்ச்சலை ஜியோ ஏற்படுத்தியது. தற்போது சுமார் 500 மில்லியன் பயனர்கள் ஜியோ டெலிகாம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 31 நிலவரப்படி இந்தியா முழுவதும் சுமார் 524.4 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதில் 268.5 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி (5G) சேவையைப் பயன்படுத்துகின்றனர். வருவாய் மற்றும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயில் (ARPU) ஏர்டெல் முன்னணியில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பிராட்பேண்ட் விரிவாக்கத்தில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
பயனர்களை ஈர்க்க சிம் கார்டை இலவச பயன்பாட்டுக்கு வழங்கியது. அதன் பின்னர் ரீசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்தது. இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ. 10,000 விலையில் 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டத்தை தற்போது இப்போது சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுவரை 10,000 ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்ததில்லை.
அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல கூடுதல் சலுகைகளும் அடங்கியுள்ளன. மேலும், பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் உங்களுக்கு என்னென்ன கிடைக்கும்?
வேலிடிட்டி (Validity) : முழுமையாக 3 ஆண்டுகள் (1,095 நாட்கள்) செல்லுபடியாகும்.
அழைப்புகள் (Calls) : எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற (Unlimited) இலவச வாய்ஸ் கால்கள்.
தினசரி டேட்டா (Daily data) : ஒவ்வொரு நாளும் 2.5 GB அதிவேக 4G டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் 5G (Unlimited 5G) : ஜியோவின் True 5G நெட்வொர்க் மற்றும் தகுதியான ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பயனர்களுக்கு முற்றிலும் வரம்பற்ற இலவச 5G டேட்டா கிடைக்கும்.
SMS: தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்.
ஜியோ திட்டம் - கூடுதல் டிஜிட்டல் சலுகைகள்:
JioHotstar Mobile + Hollywood: திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரீமியம் ஓடிடி உள்ளடக்கங்களை இலவசமாகப் பார்க்கலாம்.
Canva Pro Lite: கிராஃபிக் டிசைன் செய்வதற்கு ஏதுவாக 12 மாதங்களுக்கான பிரீமியம் கேன்வா சந்தா இலவசம்.
JioAICloud: உங்களது புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைச் சேமிக்க 50 GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதி.
இதில் உள்ள நன்மைகள் என்ன?
* அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தினாலும், இந்தத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. உங்களுக்கான பலன்கள் லாக் செய்யப்பட்டுவிடும்.
* இந்தத் திட்டத்தின்படி பார்த்தால், ஒரு மாதத்திற்குத் தோராயமாக ரூ. 278 மட்டுமே செலவாகிறது (தினமும் ₹9.13). இது வழக்கமான 1 வருடத் திட்டங்களை விட நீண்ட கால அடிப்படையில் லாபகரமானது.
* அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற கவலை 3 ஆண்டுகளுக்கு இருக்காது.
* இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி வசதியும் கிடைக்கிறது.
* இந்தத் திட்டம் பயனர்களை ஜியோவின் வாடிக்கையாளர்களாகவே தொடர்ந்து நீடிக்க செய்யும்.
டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவும் சூழலில் ஜியோவின் இந்த ரூ.10,000 ரீசார்ஜ் திட்டம் கவனம் பெற்றுள்ளது.
இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கான திட்டம் என்றாலும், 10,000 ரூபாயை ப்ரீபெய்ட் திட்டத்திற்காகச் செலவிடக்கூடியவர்கள் மிகச் சிலரே. போதுமான வருமானம் கொண்ட ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் மட்டுமே இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த புதிய பேக்கை நீங்கள் மைஜியோ (MyJio) செயலி, ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஜியோ ரீடைல் கடைகள் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.