

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு கணிதத் தீர்மானம், இன்றும் மனிதர்கள் நேரத்தை கணக்கிடும் முறைக்கு காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்தும் 24 மணி நேர அமைப்பு ஒரு சாதாரண விஷயம் போல தோன்றினாலும், அதன் பின்னால் ஒரு ஆழமான வரலாறு இருக்கிறது.
பழங்கால இந்திய வானிலை வல்லுனர்கள் நேரத்தை கணக்கிட மத்திய பிரதேசத்தின் அமைந்துள்ள உஜ்ஜயினி நகரத்தையே உலகின் மைய புள்ளியாக(ஜீரோ மெரிடியன்) கருதினர். ஏனெனில் பூமியின் நிலநடுக்க கோடும், கடக ரேகையும் சந்திக்கும் நேர்க்கோட்டில் உஜ்ஜயினி அமைந்திருப்பதால் இது நேரத்தை கணக்கிட மிகச்சரியான இடமாக கருதினர் வானிலை வல்லுனர்கள்.
இந்தியா தனது வரலாற்று மற்றும் வானியல் பாரம்பரியத்தை நிலைநிறுத்த, உஜ்ஜயினியை மையமாகக் கொண்ட மகாகால் சராசரி நேரத்தை (Mahakal Standard Time - MST) உலகளாவிய நேரக் கணக்கீடாக மாற்றும் ஆலோசனையில் உள்ளது.
இது இந்தியாவின் நேரக் கணக்கீட்டு அறிவியலை உலகிற்கு மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
'மஹாகால் திட்ட நேரம்' (MST) என்பது, கிரீன்விச் திட்ட நேரத்திற்கு (GMT) மாற்றாக அமையும் வகையில், ஏப்ரல் 2026-ல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களால் முன்மொழியப்பட்ட ஒரு கால அளவீட்டுத் தரநிலையாகும். மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் நகரின் தொன்மையான வானியல் முக்கியத்துவத்தையும், அது கடக ரேகையும் சந்திக்கும் நேர்க்கோட்டில் மீது அமைந்துள்ள நிலையையும் சுட்டிக்காட்டி, அந்நகரத்தையே உலகளாவிய 'முதன்மை நெடுவரையாக' (Prime Meridian) நிறுவுவதற்கு இத்திட்டம் முன்மொழிகிறது.
இந்திய ஆன்மீகத்திற்கும் அறிவியல் அறிவுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்ட, உஜ்ஜைனில் நடைபெற்ற 'மகாகால்: காலத்தின் அதிபதி' என்ற சர்வதேச மாநாட்டில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. பண்டைய அறிவியலுக்கான ஒரு "வாழும் ஆய்வகமாக" உஜ்ஜைனின் பங்கை எடுத்துக்காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இது ஆங்கிலேயர்களின் அடையாளங்களை அகற்றி, பழங்கால கால முறையை நவீன அறிவியலுடன் மீண்டும் கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆங்கிலேயர்கள், 1905-ம் ஆண்டு இந்த நேர கணக்கீட்டினை மாற்றி இந்திய திட்ட நேரம்(ஐஎஸ்டி) என்பதனை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் நடைமுறைப்படுத்திய கிரீன்விச் நேரத்திற்கு பதிலாக, உஜ்ஜயினியை மையமாகக் கொண்ட கணக்கீட்டை (மஹாகால் திட்டம்) கொண்டுவருவதன் மூலம், நேரத்தை 27 நிமிடங்கள் பின்னோக்கி மாற்ற முடியும் என கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
தற்போது உலகளாவிய கிரீன்விச் சராசரி நேரத்தை விட (ஜிஎம்டி) இந்தியா 5 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கும், மேற்கு மாநிலங்களுக்கும் இடையே சூரிய உதயத்தின் சுமார் 2 மணிநேரம் வித்தியாசம் உள்ளது சவாலாக இருக்கிறது.
இந்த ‘மஹாகால் ஸ்டாண்டர்டு டைம்’ (எம்எஸ்டி) நடைமுறைக்கு வந்தால் அது இந்தியாவின் கால கணக்கீட்டில் கலாசார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அதைவிட மிக முக்கியமாக இந்திய நேரமானது தற்போதைய நேரத்தை விட சுமார் 27 நிமிடங்கள் பின்னோக்கி செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்த திட்டம் ஒரு கோரிக்கையாகவும், ஆராய்ச்சியாகவும் மட்டுமே உள்ளதே தவிர, நடைமுறைப்படுத்துவது கடினம் என்பதே தற்போதைய நிலையாகும்.