
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூலம் அமைக்கப்பட்ட ரெப்போ விகிதம், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரெப்போ விகிதத்தில் மாற்றங்கள் நேரடியாக இஎம்ஐ-கள், கடன் மலிவான தன்மை மற்றும் வீடு வாங்குபவர்களுக்கான கடன் செலவுகளை பாதிக்கின்றன. அதிக ரெப்போ விகிதம் என்பது விலையுயர்ந்த கடன்கள் ஆகும், அதே நேரத்தில் குறைந்த விகிதம் மலிவான இஎம்ஐ-களுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நிதி அமைப்பில் ஆரோக்கியமான மற்றும் நிலையான பணப்புழக்கத்தை நிர்வகிக்க மற்றும் பராமரிக்க ரெப்போ விகிதங்களை பயன்படுத்துகிறது. நிதிகள் பற்றாக்குறை ஏற்படும்போது, வணிக வங்கிகள் RBI-யில் இருந்து பணத்தை கடன் வாங்குகின்றன, இது ரெப்போ விகிதத்தின்படி திருப்பிச் செலுத்தப்படுகிறது. விலைகளை கட்டுப்படுத்தவும் கடன்களை கட்டுப்படுத்தவும் மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கிறது. மறுபுறம், சந்தையில் அதிக பணத்தை செலுத்த வேண்டிய மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் போது ரெப்போ விகிதம் குறைக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக இந்திய வங்கிகளுக்கானதனதுரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளது. இத்தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நவம்பர் மாதம் இந்த வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டன. ஆனால் தற்போது நவம்பர் அல்லது டிசம்பரில்தான் இந்த அறிவிப்பு வெளியாகும் என அறியப்படுகிற்றது.ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு நிகழ இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பல வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
SBIயின் அறிக்கையின்படி பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், பணவீக்கம் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு வங்கிகள் மத்தியில் நிலவி வருகின்றன.மேலும் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வலுவான பிற காரணங்களும் உள்ளனவாக SBIயின் அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றம் கடந்த சில வாரங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும், பல வங்கிகள் இன்னும் இந்த பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசெல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் வந்த வண்ணம் உள்ளன.வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கிகளை அணுகி, வட்டி குறைப்பின் பலனைப் பெற வேண்டும்.இதைச்சார்ந்து வங்கி வாடிக்கையாளரிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் எதைக் குறைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.கடன் பெற்றவர்களின் விருப்பம் இல்லாமல், வங்கிகள் தானாக எந்த முடிவடையும் எடுக்கக் கூடாது என்பதே விதி. சில வங்கிகள் இன்னும் இதைப் பற்றியத் தகவலை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி EMIயையோ அல்லது கடன் செலுத்தும் காலத்தையோ குறைத்துக் கொள்ள, தங்கள் வங்கிக் கிளையில் ஒரு கடிதம் எழுதித்தர வேண்டும்.அதன் அடிப்படையில் மட்டுமே வங்கிகள் நடவடிக்கைகள் எடுக்கும்.
மொத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த தொடர் ரெப்போ விகிதக் குறைப்பு, வீடு மற்றும் சிறு வணிகக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். வங்கிகள் இந்த பலனை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.அப்போதுதான் வங்கியின் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் மாதாந்திரகடன் சுமை கணிசமாகக் குறையும்.
25 அடிப்படைப் புள்ளிகள் (BPS) ரெப்போ விகிதக் குறைப்பு செய்யப்படுவது ரிசர்வ் வங்கிக்குச் சிறந்த வழி என SBI அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால், அடுத்த மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 25 BPS ரெப்போ விகிதக் குறைப்பை அறிவிக்கலாம். 2025 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக 25 BPS குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.