

இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழு இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக மாறியது. 1930-இல் 'பூரண சுயராஜ்யம்' தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளைக் கௌரவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக மிகப்பெரிய அணிவகுப்பு நடைபெறுகிறது. ராணுவம், கடற்படை, வான்படை ஆகிய முப்படை அணிவகுப்பு,இந்தியாவின் பண்பாடு, வரலாறு, வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.மேலும் பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள். சாதனை வீரர்களுக்கு வீர விருதுகள் (பரம்வீர் சக்ரா, அசோக் சக்ரா போன்றவை)ஆகியவைகள் இதில் முக்கியமான நிகழ்வுகளாகும்.
அந்த வரிசையில் 77வது குடியரசு தினம் ஜனவரி 26, 2026 அன்று இந்தியாவில் டெல்லியில் உள்ள ராஜ்பாத் (Kartavya Path) பகுதியில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக 30 அலங்கார ஊர்திகள்(Tableaux ) இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு “வந்தே மாதரம்” மற்றும் “சாம்ரத்யா – ஆத்மநிர்பர் பாரத்” போன்ற கருப்பொருள்களை மையமாக கொண்டு பல ஊர்திகள் வடிவமைக்கப்படுகின்றன.
இவற்றில் தமிழ்நாட்டின் ஊர்தியும் இடம்பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது."பசுமை மின் சக்தி” (Green Power / Renewable Energy) எனும் கருப்பொருளில் தயாராகும் இந்த ஊர்தி புதுமையான மின் சக்தி திட்டங்கள், renewable energy வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னேற்றங்கள் , பசுமை மின் சக்தி மற்றும் சூரிய/மின் சக்தி வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, 2024-ல் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது நாடாளுமன்ற அரசியல் மற்றும் பொதுமக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இதேபோல் முதல் முறையாக இந்த வருடம் புதுச்சேரியின் டெரகோட்டாவை (சுடுமண்கலை) மையமாக கொண்ட அலங்கார ஊர்தியும் மத்திய அரசின் ஒப்புதலுடன் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ளதும் வரலாற்றுப்பூர்வ நிகழ்வு எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஊர்தி மண்பாண்டம், பாரம்பரிய கைதொழில்கள் மற்றும் கிராமிய கலாச்சாரத்தைக் எடுத்துக் காட்டும் விதமாக வடிவமைக்கப்படுகிறது.
கருப்பொருள், புதுமை, கலைநயம், தெளிவான செய்தி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஊர்திகள் பல மாநில அலங்கார ஊர்திகள் இந்தியாவின் பன்முகத் தன்மை ,ஒற்றுமை ,வளர்ச்சி பயணம் ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆண்டின் கருப்பொருள் (Theme) அடிப்படையில் ஒரே மேடையில் உலகிற்கு காட்டும் பிரதான கருவிகளாக இருக்கிறது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளுக்கு (Tableaux) கருப்பொருள் (Theme) தெளிவு ,கலைநயம் & புதுமை தேசிய ஒருமைப்பாடு பிரதிபலிப்பு அடிப்படையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது மேலும் சிறப்பு.
இந்த ஆண்டு 'பசுமை மின் சக்தி' கருப்பொருளில் பங்கேற்கும் தமிழக ஊர்திக்குப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.