Water Zero City யாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் பெங்களூர் வாசிகள்!

Water Crisis
Water Crisis

பெங்களூரில் தொடர்ந்து நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் உலகின் தண்ணீர் இல்லாத நகரங்களில் பெங்களூர் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்தான். அதுவும் கூட 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவும் கடும் வறட்சியால் தான்.

இந்தியாவின் மிகப்பெரிய ஐந்து நகரங்களில் ஒன்று பெங்களூர். நிர்வாகத் தலைநகரம் டெல்லி என்றால், வர்த்தகத் தலைநகரம் மும்பை என்றால், ஐடி தலைநகரம் பெங்களூர் தான். அப்படியிருக்க, தற்போது பெங்களூர் நகரம் வரலாறு காணாதத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது.

பெங்களூர் நகரம் ஐடி நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் வளர்ச்சியடைந்த நகரமாக மாறியது. 1990ம் ஆண்டுகளில் நடுத்தர நகரங்களில் ஒன்றாக இருந்த பெங்களூர் இப்போது ஐடி நிறுவனங்களால் உயர்த்தர நகரங்களில் ஒன்றாக மாறியது. ஐடியில் மட்டும் இல்லை தற்போது பெங்களூரில் எல்லா தொழில்களும் நன்கு வளர்ந்து வருகிறது.

பெங்களூர் நகரம் எப்போதும் பசுமை நிறைந்ததாகவும் குளு குளுவெனவும் இருக்கும். இதனாலேயே வெளிநாட்டிலிருந்து பல ஐடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஐடி நிறுவனங்களைத் தொடங்க ஆரம்பித்தன. அதன் அசுர வளர்ச்சியால் பெங்களூருவின் மக்கள் தொகை 1 கோடி 40 லட்சமாக உயர்ந்துள்ளது. நிறைய மக்கள் தொகைக் கொண்ட பெங்களூருவிற்கு ஒரே நீராதாரம் காவேரி ஆறுதான். சென்னைக்குக் கடல்நீரைக் குடி நீராக்கும் திட்டம் உள்ளதால் அந்த அளவிற்குப் பிரச்சனை வராது. ஆனால் பெங்களூருக்கு அப்படியில்லை, அங்கு ஆண்டிற்கு 3000 கோடி கன அடி நீர் தேவைப்படுகிறது.

இந்தநிலையில்தான் கடந்த ஆண்டு பெங்களூருவில் மழை அவ்வளகாவப் பெய்யவில்லை. இதனால் பெங்களூருவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. மேலும் காவேரி நீர் வினியோகமும் கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் பெங்களூருவில் குடிநீர் பஞ்சம் நிலவிவருவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

Tweet
Tweet

அந்தவகையில் திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பற்றி கருத்துத் தெரிவித்தார். அதாவது "உலகின் இரண்டாவது தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள நகரமாக பெங்களூர் மாறக்கூடும்.

இதையும் படியுங்கள்:
ராஜ்ய சபா எம்.பி.யாக சுதா மூர்த்தி தேர்வு!
Water Crisis

பெங்களூருவில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கூட வெள்ளம் பெருகியது. ஆனால் அவ்வளவு நீர் இப்போது எங்கேப் போனது என்றே தெரியவில்லை. கடல் மட்டத்திலிருந்து 1 கிமீ உயரத்தில் இருக்கும் தக்காணப் பீடபூமி நகரம் பெங்களூர். எனவே, நீர்மட்டத்தை பூமி மட்டத்திலேயே  சேகரித்து வைத்தால்தான் உண்டு. அதற்கென இருந்த ஏரிகளை எல்லாம் அவர்கள் தொலைத்துவிட்டனர்” என்று பதிவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com