அமுலுக்கு வந்த ஆதார் கட்டண உயர்வு..! முழு பட்டியல் இதோ..!

Adhar card...
Adhar card...
Published on

ஆதார் அட்டையில் நாம் செய்யும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் தனித் தனி கட்டணங்கள் எப்போதும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இதற்கான கட்டணங்கள் தற்போது மத்திய அரசினால் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

ஆதார் அட்டையில் தேவைப்படும் மாற்றங்களை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்றோ நாம் செய்துகொள்ளலாம். அந்த சேவைக்காக அரசுக்கு நாம் தனிக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

UIDAI வலைதளத்தில் நம்முடைய ஆதார் விவரங்களில் நாமே அதற்கான கட்டணத்தை செலுத்தி சில மாற்றங்களைத்தான் செய்து கொள்ள முடியும்.ஆனால், ஆதாரின் சில சேவைகளை அரசின் இ-சேவை உதவி மையத்திற்கு சென்றுதான் நாம் செய்து கொள்ளமுடியும். இவ்வாறு செய்யப்படும் அனைத்து ஆதார் மாற்றங்களுக்கும் இப்பொழுது நாம் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும்.இந்த கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றம் 2028-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுவரை ரூ.50-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.75ஆகவும்,ரூ.75-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.90க்குமாக உயர்த்தப்பட்டுள்ளன.ரூ100-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.125 ஆகவும்,இதுவரை ரூ.125-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, நாம் ஒவ்வொரு ஆதார் சேவைக்கும் தற்போது கூடுதலாக ரூபாய் 25 ஐ செலுத்த் வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஏழுமலையான் 'வெறுங்கை வேடன்' என்று அழைக்கப்படுவதன் ரகசியம் தெரியுமா?
Adhar card...

குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் விண்ணப்பிப்பதும், அவர்களது 5 - 7 வயது மற்றும் 15 - 17 வயதுகளில் புதுப்பிக்கப்படும் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுகள் முற்றிலும் இலவசக் கட்டணசேவையாகவே தொடர்ந்து இருக்கும்.

இந்த வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற மாற்றங்களை செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

  • ஆதாரில் அடையாள சான்று, முகவரி சான்று அப்டேட் செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.

  • 7 - 14 வயது மற்றும் 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

  • பயோமெட்ரிக் அப்டேட் செய்பவர்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும்.

  • ஆதார் அட்டையை UIDAI வலைதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொடுக்க ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆதார் சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதை மனதில் கொண்டு இனி செயல்பட வேண்டும்.

அடுத்து கட்ட கட்டண உயர்வு 2028ஆம் ஆண்டின் அக்டோபர் 1ஆம் தேதியன்று தொடங்கும். அப்போது, 75 ரூபாயாக இருக்கும் சேவைகளுக்கான கட்டணம் 90 ரூபாயாக உயரும். மேலும், 125 ரூபாயாக இருக்கும் சேவைகளுக்கான கட்டணம் ரூ.150 ஆக அதிகரிக்கும். இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் 2031ஆம் ஆண்டின் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் கட்டணங்கள் மாற்றப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com