
இந்தியாவில் அன்றாடம் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களில் அரிசி முக்கிய இடத்தை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும் தமிழத்தில் அரிசி பயன்பாடு இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அரிசியின் தேவை தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அரிசி விளைச்சல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரிசி விளைச்சல் சாகுபடிப் பருவங்களைப் பொறுத்து அதன் அளவு மாறுபடும். விளைச்சலை அதிகரிக்க மரபணு மாற்றப்பட்ட விதைகளும், உயர் விளைச்சல் தரும் ரகங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது அரிசிப் பொருள் மற்றும் உற்பத்தியின் ஒரு முக்கிய அம்சமாகும். 2023-24ம் ஆண்டில், தமிழ்நாட்டின் நெல் விளைச்சல் தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் சம்பா, குறுவை போன்ற பல்வேறு பருவங்களின் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது, இது அரிசி விளைச்சலின் ஒரு பகுதியாகும்.
தமிழ்நாட்டில் நெல் அறுவடை சம்பா, குறுவை பெயரில் அறுவடை நடக்கிறது. இதில் சம்பா அறுவடையில் 75 சதவீதமும், குறுவை அறுவடையில் 25 சதவீதமும் இருக்கிறது.
இந்த நிலையில் பருவமழை எதிர்பார்த்ததைவிட நல்ல மழை கொடுத்து சென்றதால், நெல் விளைச்சல் அமோகமாக கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் தற்போது குறுவை அறுவடையில் அமோக விளைச்சல் கிடைத்திருப்பதால், அரிசி விலை தற்போது குறைக்கப்பட்டிருப்பதாக அரிசி ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் வெள்ளை பொன்னி புழுங்கல், சோனா பொன்னி பச்சை, வெள்ளை பொன்னி பச்சை அரிசி விலை கிலோவுக்கு ரூ.4 வரை குறைந்துள்ளது. அதேபோல் அதிசய பொன்னி வகையை சேர்ந்த ஏ.டி.டி.43, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 உள்ளிட்ட அரிசிகள் விலை கிலோவுக்கு ரூ.2 வரை குறைந்துள்ளது. அம்பை 16, சி.ஆர்.1009 உள்ளிட்ட அரிசிகள் விலை கிலோவுக்கு ரூ.4 வரையிலும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓராண்டிற்கு அரிசியின் தேவை 91 லட்சம் டன்னாக உள்ளது நிலையில், இதில் 70 முதல் 72 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டில் மட்டுமே விளைவது குறிப்பிடத்தக்கது. அதாவது, நமக்கு தேவையான அரிசியில் முக்கால் பாகத்தை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம்.
மீதமுள்ள 30 லட்சம் டன் அரிசி கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
மேற்சொன்ன அரிசி விலை குறைப்பு 2 அல்லது 3 மாதங்களுக்கு நீடிக்கும் எனவும், அதன் பிறகு விளைச்சலை பொறுத்து, விலையில் கூடவே, குறையவோ மாற்றம் இருக்கலாம் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 25 கிலோவுக்கு கீழ் ‘பேக்கிங்' செய்யப்படும் அரிசிக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் அத்தியாவசிய உணவான அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் இந்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும் நீக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி திருத்தம் செய்யப்பட்ட போது இதற்கான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேசமயம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும் நீக்கினால் அரிசி விலை மேலும் குறையும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு மேலும் பயனளிக்கும் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.