

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் தட்டுபாடு நிலவி வருகிறதென்று நம் எல்லோருக்குமே தெரியும். குறிப்பாக, ஜார்க்கண்டில் கடந்த பத்து நாட்களாகவே தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்த மாநிலத்திலுள்ள கார்வா மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் , தொலைதூர கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணியை மேற் கொள்வதற்காக தன்னுடைய மோட்டார் சைக்கிளை உபயோகப் படுத்தாமல், அவருடைய பழைய குடும்பக் குதிரையைப் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா மாவட்டத்தில், முன்னா பிரசாத் குப்தா என்பவர், தாதிதிரியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக தனக்கு நிர்ணயிக்கப் பட்ட பகுதியை அடைய குதிரையில் சென்றிருக்கிறார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அலுவல் பணிக்காக ஆசிரியர் ஒருவர் குதிரை சவாரி செய்யும் இந்த அசாதாரணமான காட்சி, சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை மிக வேகமாக ஈர்த்துள்ளது. இந்தத் தனித்துவமான அணுகு முறையானது, பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் பலதரப்பட்ட எதிர் வினைகளையும் தூண்டியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், குதிரையில் செல்வது சிக்கனமாகத் தோன்றியதாக அவர் விளக்கினார். மே 16-ஆம் தேதி முதல், அவர் வீடுகள் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக நியமிக்க பட்டுள்ளார்.
உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சமயத்தில், ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் ஒரு தனித்துவமான சம்பவம் நிகழ்ந்துள்ளதென்றே சொல்லலாம்.
இந்த ஆசிரியர், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக இரு சக்கர வாகனம் அல்லது காருக்குப் பதிலாகக் குதிரையில் பயணம் செய்துள்ள இந்தத் தனித்துவமான செயல், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, ஒரு பெரிய விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.