உயரும் எண்ணெய் விலை: வியாபாரிகள், இல்லத்தரசிகள் கவலை!

Increase in price of oil
Oil
Published on

நாடு முழுவதும் வருகிற 11ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. மேலும் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்த பண்டிகைகளை கொண்டாட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் இனிப்பு, கார வகை பலகாரங்கள் அதிக அளவு செய்யப்படும். மேலும் அன்றாட சமையலுக்கும் மிக முக்கிய பொருளாக எண்ணெய் விளங்குகிறது. இந்த நிலையில் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கடந்த 10 நாட்களில் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்து உள்ளது. சூரிய காந்தி எண்ணெய் லிட்டர் ரூ.115 விற்ற எண்ணெய் தற்போது ரூ.135 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதேபோல் பாமாயிலும் லிட்டர் ரூ.100க்கு விற்ற எண்ணெய் தற்போது ரூ.120க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு லிட்டர் டால்டாவானது ரூ.120 முதல் ரூ.145 வரை விற்பனையாகிறது.

உணவு பொருட்கள் விலை உயர்வு:

இந்த திடீர் விலை உயர்வால் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளிலும் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் பாமாயில் எண்ணெய் விலை உயர்வால் சாலையோரங்களில் டீ கடை வைத்து வடை, பஜ்ஜி விற்பனை செய்யும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றால் அவற்றின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் பொருட்களின் விலை உயர்வால் அன்றாட உணவு பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

இறக்குமதி வரி உயர்வு

பண்டிகை காலம் நெருங்குவதால் எண்ணெய் விலையானது கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதற்கு எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக வரியை உயர்த்தினாலும் திடீரென லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்த்தி உள்ளது. ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பலகாரங்களை வாங்குவதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இதையும் படியுங்கள்:
'உலக அளவில் தொழில் நிறுவனங்களின் முதல் முகவரி தமிழகம்' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Increase in price of oil

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறியதாவது:

கவலை அளிக்கிறது

கடந்த சில நாட்களாக எண்ணெய் விலையானது கட்டுக்குள் இருந்தது. இந்தநிலையில் பண்டிகை காலம் நெருங்குவதால் கடந்த 10 நாட்களாக எண்ணெய் விலையானது ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நாங்கள் பண்டிகை காலங்களில் இனிப்பு, கார பலகாரங்கள் தயாரிக்க அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த விலையானது தொடர்ந்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது என்னை போன்ற இல்லத்தரசிகளுக்கு கவலையை அளிக்கிறது. இதன் காரணமாக மற்ற உணவு பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே அரசானது இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com