உடனே விண்ணப்பீங்க..! ரயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – 600 காலியிடங்கள் அறிவிப்பு..!
ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனமானது, தற்போது காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் : RITES Ltd (Rail India Technical and Economic Service)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 600
பணி : Senior Technical Assistant
பணியிடம் : தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 14.10.2025
கடைசி நாள் : 12.11.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம் : https://rites.com/Career
பதவி: Senior Technical Assistant
சம்பளம்: Rs.29,735/-
காலியிடங்கள்: 600
கல்வி தகுதி: ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தின் Senior Technical Assistant (மூத்த தொழில்நுட்ப உதவியாளர்) பணிக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கீழ்க்கண்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்:
B.Sc. in Chemistry
(அல்லது)
Full time Diploma in Civil Engineering
(அல்லது)
எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் முழுநேர டிப்ளமோ
(அல்லது)
மெக்கானிக்கல்/ புரொடக்ஷன்/ புரொடக்ஷன் & இண்டஸ்ட்ரியல்/ மேனுஃபாக்சரிங்/ மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல் பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ
(அல்லது)
கெமிக்கல்/ பெட்ரோகெமிக்கல்/ கெமிக்கல் டெக்னாலஜி/ பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி/ பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி/ உணவு/ ஜவுளி/ தோல் டெக்னாலஜி ஆகியவற்றில் முழுநேர டிப்ளமோ.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.100/-
Others – Rs.300/-
விண்ணப்பக் கட்டணங்களைப் பொறுத்தவரை, பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடியினர் (ST), முன்னாள் இராணுவத்தினர் (Ex-s) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்த மேலே குறிப்பிட்ட பிரிவுகளைத் தவிர்த்த மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் (Others Candidates) ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
ரயில்வே துறை RITES நிறுவனம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
Written Test (எழுத்துத் தேர்வு)
Document Scrutiny (ஆவணச் சரிபார்ப்பு)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வே துறை RITES நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.10.2025 முதல் 12.11.2025 தேதிக்குள் https://rites.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.