மீனவர்கள் வலையில் ராக்கெட் வெடிகுண்டு: போலீஸ் விசாரணை!

வெடிகுண்டு
வெடிகுண்டு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றுத் திரும்பிய பிறகு, மீன் வலையை கடற்கரையில் போட்டு விட்டு சென்றனர்.

நேற்று மதியம் அந்த மீனவர்கள் கடற்கரையில் தாங்கள் விட்டுச் சென்ற மீன் வலையை எடுக்கச் சென்றபோது, அதில் ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படை போலீசார், அந்த ராக்கெட் வெடிகுண்டைக் கைப்பற்றி ஜாக்கிரதையாக அங்கிருந்து அப்புறப்படுத்தி,  மணல் மூட்டைகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு சென்றனர்.

இந்த ராக்கெட் வெடிகுண்டு மீனவர்கள் வலையில் கிடைக்கப் பெற்றது எப்படி என்பது குறித்து கடலோர காவல் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com