சிவகாசியில் தீபாவளி பட்டாசு அமோக விற்பனை..! ரூ.7,000 கோடிக்கு விற்று வசூல் சாதனை..!

Crackers Price Raised
Crackers
Published on

1922ல் சிவகாசியில் பொது மக்களுக்கு கடுமையான வேலையின்மை ஏற்பட்டது. இதன்காரணமாக தீப்பெட்டி வேலைக்கு இங்கிருந்து இரு சகோதரர்கள் கொல்கத்தா சென்றனர். அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்து தீப்பெட்டித் தொழிலை முழுமையாக கற்றுக் கொண்டு 1923ம் ஆண்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பினார்கள். ஊர் திரும்பிய அவர்கள் சிவகாசியில் நேஷனல் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினர்கள்.

சிவகாசியை சேர்ந்த இரு சகோதரர்களான அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் ஆகியோர் சீனர்களை பின்பற்றி சிறிய பட்டாசுகளை தயார் செய்தனர். பின்னாளில் பட்டாசு தொழிலிலும் அவர்கள் ஈடுபடத் தொடங்கினர். பட்டாசு மற்றும் தீப்பெட்டிக்கு தேவையான லேபிள் முதலில் வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பொருட் செலவை கட்டுபடுத்த ஒரு கட்டத்தில் இதற்காக அச்சு ஆலைகள் சிவகாசிக்கு வரத் தொடங்கின. இப்படி தீப்பெட்டி, பட்டாசு, அச்சு இந்த மூன்றும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி வந்த நிலையில், இன்று இந்தியாவில் 90 சதவிகித பட்டாசுகளும், 80 சதவிகித தீப்பெட்டியும், அச்சு தேவையில் 70 சதவிகிதமும் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பட்டாசு உற்பத்தியில் சீனர்கள் முதல் இடத்திலும்,அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வருவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆகும். சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகரில் செயல்பட்டு வரும் 1000க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் தான் இந்த பெருமைக்கு காரணமாக அமைகின்றன.மழை குறைவாக பெய்யும் கந்தக பூமியான சிவகாசியின் சூழல் பட்டாசு உற்பத்திக்கு பெரும் உதவியாக உள்ளது.

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியன்று எண்ணெய்க் குளியல், இனிப்பு வகைகள், பட்டாசுகள் ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன.புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் வழக்கம் போல் பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், வித விதமான உணவு வகைகள் ஆகியவை பொதுமக்களால் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் பட்டாசுகள்தான் சிறுவர்களை அதிகமாக கவருகின்றன.ஆர்வத்துடன் பட்டாசுகளை நட்புகளுடனும், உறவினர்களிடனும் தீபாவளிக்கு முதல் நாளிலிருந்தே அவர்கள் வெடிக்கத் தொடங்குவது வாடிக்கையாகி விட்டது. பெரியவர்களும் குழந்தைகள் பட்டாசுகளை வெடிப்பதை பார்த்து மகிழ்கிறார்கள்.

மாநிலத்தில் பட்டாசுகள் உற்பத்திக்கும்,விற்பனைக்கும் புகழ்பெற்ற இடமான சிவகாசியில். இவ்வருட தீபாவளிப் பண்டிகையின் போதுரூ.7,000 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளாதாகக் கூறப்படுகிறது.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டாசு விற்பனையை விட 20 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது.இந்த செய்தியை பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், புதுப்புது பட்டாசு ரகங்களை சிறுவர்கள் அதிகம் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கசிவகாசிக்கு அதிக மக்கள் சென்று பட்டாசுகளை வாங்கியுள்ளனர். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களிலும் பட்டாசுகள் வாங்க வெளியூர் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் மூலமும்பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றது.ஆனாலும் அதிக மக்கள் பட்டாசுக் கடைகளுக்கு நேரில் சென்றுதான் பட்டாசுகளை வாங்கியுள்ளனர். இதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பட்டாசுகளை வாங்க முடிந்ததாக கூறுகிறார்கள்.இந்த ஆண்டு பல புது வகையான ஏராளமான பட்டாசுகளும் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தன.எனவே இவற்றை வாங்குவதில் பட்டாசுப்பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கான புதிய ரக பட்டாசுகளில் பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட், கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் போன்ற 30க்கும் மேற்பட்ட பல புது ரக பட்டாசுகள்அடங்கும். எனினும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அடைவதை மனதில் கொண்டு பட்டாசுத் தயாரிப்பவர்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டும் இனி வரும் காலங்களில் தயாரிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
EMI கட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Crackers Price Raised

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com