
அவசியத்திற்காக கடன் வாங்கியது போய் இப்போதெல்லாம் ஆடம்பரத்திற்காகவும் இஎம்ஐ தான் கிடைக்கிறதே என்றும் கடன் வாங்க தொடங்குகிறோம். சின்ன அமௌன்ட் தானே... கட்டிவிடலாம் என்று ஒவ்வொரு கடனாக வாங்கி கடைசியில் இஎம்ஐ கட்டுவதில் சிக்கிக் கொள்பவர்கள் ஏராளம். இதைத் தவிர்க்க ஒருவர் ஒரே நேரத்தில் பல கடன்கள் வாங்குவது தவிர்க்க வேண்டும்.
EMI கட்டுபவர்கள் கடனின் விதிமுறைகள், EMI செலுத்தும் முறை மற்றும் வட்டி விகிதங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
EMI தவணை செலுத்த வாகன கடன், வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் ஆகியவற்றின் விதிமுறைகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆட்டோ-டெபிட் வசதியை தேர்வு செய்வது நல்லது.
வட்டி விகிதங்கள்:
கடன் வாங்குவதற்கு முன்பு மாதம் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். முக்கியமாக அவை நம் வருமானத்தில் 25% மேல் வட்டி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். EMIயைக் குறைப்பதில் வட்டி விகிதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த வட்டி விகிதம் EMI தொகையை குறைக்கும்.
ப்ரீ-இஎம்ஐ கட்டணங்கள்:
கடனை திருப்பி செலுத்த தொடங்குவதற்கு முன்பே, கடன் வழங்குநர் மற்றும் பில்டருடன் உங்கள் ஒப்பந்தத்தின்படி ப்ரீ-இஎம்ஐ செலுத்த வேண்டும். இந்த தவணைகள், பில்டரின் கட்டுமான காலத்திற்கு முந்தைய கட்டணங்களாகும்.
பில்டரின் நம்பகத்தன்மை:
பில்டரின் கடந்த கால திட்டங்களை ஆராய்ந்து, அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். நம்பகத்தன்மை இல்லாத பில்டர்களால் திட்ட தாமதங்கள், செலவு மீறல்கள் மற்றும் கடன் வழங்குநர் சிக்கல்கள் ஏற்படலாம்.
கடன் விதிமுறைகள்:
கடன் ஒப்பந்த விதிகளை கவனமாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். வெவ்வேறு வங்கிகளின் கடன் விதிமுறைகள் மாறுபடலாம். அத்துடன் கடன் வாங்குவதற்கு முன்பு ஏதாவது சலுகை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது நல்லது. சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வங்கி, நம் கடனுக்கான வட்டியில் சலுகைகள் தரலாம்.
கட்டுமான கால தாமதங்கள்:
கட்டுமானத்தில் தாமதங்கள் ஏற்பட்டால், EMI தொடங்கும் தேதி தள்ளிப் போகலாம். இதனால் உங்களுக்கான கடன் தொகை அதிகமாகும். எனவே பில்டரின் கட்டுமான அட்டவணையை கவனமாக ஆராய்வது அவசியம்.
கடன் வழங்கல்:
கடன் வழங்குபவர் கட்டுமான மைல்கற்களின் அடிப்படையில் நிதிகளை வழங்குகிறார். இது EMIகள் தொடங்கும் நேரத்தை பாதிக்கலாம்.
EMI கட்டண விதிகள்:
இஎம்ஐ கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். தவணைகளை தவறவிட்டால் தாமத கட்டணங்கள் மற்றும் கடன் மதிப்பீடு (CIBIL score) குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். EMI தவணை செலுத்துவதற்கு ஆட்டோ டெபிட் வசதியை பயன்படுத்துவது தவறுவதைத் தவிர்க்க உதவும்.
கிரெடிட் ஸ்கோர்:
ஜீரோ EMI திட்டங்களில், பில்டரின் தவறுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே உங்கள் CIBIL கணக்கை சரிபார்த்துக் கொள்ளவும்.