உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Ukrain Russia war
Ukrain Russia war
Published on

ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் தீராக்கதையாக இருந்து வருகிறது. ரஷ்யாவிடம் போரை நிறுத்தக்கோரி பல நாடுகள் கூறியும், அதனைக் கேட்காமல் போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற ரஷ்யாவின் பலம்வாய்ந்த தாக்குதல்களிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது.

பல உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவி செய்து வருகின்றன. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் ரஷ்யா உக்ரைனிடமிருந்து மேலும் இரு கிராமங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் 2 கிராமங்களை ரஷ்ய ஆயுதப்படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இருப்பதாக அக்டோபர் 16ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட  உக்ரைனிய கிராமங்களில் ஒன்று போக்ரோவ்ஸ்க்(Pokrovsk) பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
News 5 – (18.10.2024) ‘த.வெ.க. கட்சி மாநாட்டிற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன்’: நடிகர் ஜீவா!
Ukrain Russia war

போக்ரோவ்ஸ்கின் தென்கிழக்கு பகுதிக்கு 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராஸ்னி யார்(Krasnyi Yar) கிராமத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது ரஷ்ய படைகள் போக்ரோவ்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனிய ராணுவ தளவாட மையத்தை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த கைப்பற்றுதலில் மொத்தம் 350 உக்ரைன் வீரர்கள் பலியாகிவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரஷ்யா உக்ரைனில் இன்னும் 9 இடங்களில் சண்டை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com