தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 52-வது திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். இன்று அவர் தனது மனைவி ஷோபாவுக்கு சுமார் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் BMW-வை பரிசாக அளித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
வயதானாலும் குறையாத இவர்களது அன்பு இன்றும் நீடித்து வருவது பலருக்கும் உதாரணமாக அமைந்துள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் தனது திரையுலகப் பயணத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது மனைவி ஷோபாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த விலையுயர்ந்த பரிசை அவர் தனது மனைவிக்கு வழங்கியிருப்பது அவர்களின் ஆழமான அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவிக்கு காரை பரிசாக அளிப்பதும், இருவரும் ஒருவரையொருவர் அன்போடு பார்த்துக்கொள்வதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். "வயதானாலும் இந்த அன்பு குறையவில்லையே", "இப்படி ஒரு பாசமான தம்பதியினரை பார்ப்பது அரிது" போன்ற கமெண்ட்களால் சமூக வலைத்தளங்கள் நிரம்பி வழிகின்றன.
ஷோபாவின் தந்தை எஸ்.எஸ். நீலகண்டன் வாகினி ஸ்டுடியோவில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக இருந்தார். அவர் லலிதா நீலகண்டன்சலி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற இசைக்குழுவை நடத்தி வந்தார். ஷோபா மற்றும் அவரது சகோதரர்கள் சுந்தர், சுரேந்தர், ஷீலா ஆகியோர் இந்த குழுவில் பாடி நாடகங்களிலும் நடித்து வந்தனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் உதவி இயக்குனராக சேர நீலகண்டனின் நாடகக் குழுவிற்கு வந்தார். அவரது அணுகுமுறை ஷோபாவின் தந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் அவரை குழுவில் சேர்த்துக்கொண்டார். ஷோபாவின் தந்தை நாடகத்தை தயாரிக்க, எஸ்.ஏ.சி இயக்க, ஷோபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதில் நடித்து வந்தனர்.
நாடக ஒத்திகைகளின்போது எஸ்.ஏ.சிக்கும், ஷோபாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. எஸ்.ஏ.சி ஷோபாவை தீவிரமாக காதலித்தார். ஷோபாவும் அவரது அன்பை புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தார். இருவரது காதலுக்கும் இருவீட்டார் சம்மதம் கிடைக்க சில தடைகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் அவற்றை தாண்டி திருமணம் செய்து க் கொண்டனர்.
இப்படியான நிலையில் இன்று நடைபெற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியினரின் இந்த நெகிழ்ச்சியான தருணம், உண்மையான அன்பிற்கும், பந்தத்திற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அவர்களது இந்த அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்துவோம்.