

பொதுமக்கள் வரி செலுத்தாத காரணத்தினால் ஊராட்சி செயலாளர் ஒருவர் நடுரோட்டில் செய்த செயலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராம ஊராட்சிகளில் சொத்துவரி, குடிநீர் வரி போன்ற உள்ளூர் வரிகளை வசூலிப்பதற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் வீடு வீடாகச் சென்றோ அல்லது ஊராட்சி அலுவலகத்தில் முகாம்கள் நடத்தியோ வரி வசூலிப்பது வழக்கம்.பொதுவாக நிலுவை சொத்து வரியை வசூலிப்பதற்கு ஊராட்சி தலைவர்கள் நடு ரோட்டில் டிரம் அடித்து தண்டோரா போட்டு அறிவிப்பு செய்வது வழக்கம். வரி செலுத்தாதவர்களுடைய பெயர்களை ஒலிபெருக்கியில் வாசித்து, அபராத வட்டி குறித்து எச்சரிக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆனால் சானாரப்பட்டி ஊராட்சி செயலாளர் மாதவன் என்பவர் மக்களை அணுகி வரி கட்டணத்தை வசூல் செய்வது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது.
ஊராட்சிகளில் வரி வசூலிக்கப்படவில்லை என்றால் அடிப்படை பணிகள் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். ஊராட்சி செயலாளர் என்பவர் கிராமத்தின் நிர்வாகப் பணிகளை கவனிப்பதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் மற்றும் அரசுத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற முக்கிய பொறுப்புகளை மேற்கொள்கிறார்கள். ஊராட்சிக்குரிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி போன்றவற்றை முறையாக வசூலிப்பது இவர்களது முக்கிய பணிகளாகும்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சானராப்பட்டி ஊராட்சி செயலாளர் மாதவன் பொதுமக்கள் காலில் விழுந்து நூதன முறையில் தண்ணீர் வரி, வீட்டு வரி கட்டணம் வசூல் செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. உங்கள் பொற்பாதங்களை தொட்டு காலை வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். உங்களை சந்திப்பதற்கான காரணம் என்னவென்றால் அரசாங்கத்தில் பஞ்சாயத்தில் வரி வசூல் செய்ய வேண்டியது சரியாக செய்யப்படவில்லை என்றும், தான் சரியாக வேலை செய்யவில்லை என்றும், வேகமாக வேலை செய்து வரி வசூல் செய்து பஞ்சாயத்தில் கட்டினால் மட்டும்தான் பஞ்சாயத்தில் உள்ள மோட்டார் ரிப்பேர், பைப் லைன் ரிப்பேர், லைட் ரிப்பேர் போன்ற அடிப்படைப் பணிகளை செய்ய முடியும். எனவே அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அதாவது பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, பஞ்சம் வரி, தொழில் வரி போன்றவற்றை முறையாகக் கொடுத்து உதவ வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொண்டார்.
இதனால் தனக்கு அதிகாரியால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க முடியும் என்று கூறினார். இந்தப் பஞ்சாயத்தை 28 வருடமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்திருப்பதாகவும், இன்னமும் நான்கு வருடத்திற்கு இங்கே சேவை செய்வதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். வரி வசூல் செய்யவில்லை என்றால் தன்னை வேறு இடத்திற்கு மாறுதல் செய்வார்கள் என்றும், தனக்கு இந்த பஞ்சாயத்தை விட்டு போவதற்கு விருப்பமில்லை. உங்களுக்கு பைப்லைன் இருந்தால் அதற்கான பணத்தை கட்டி விடுங்கள்.28 வருடமாக எந்த வித சிக்கனமும் இல்லாமல் பஞ்சாயத்தில் சேவை செய்து அதுவும் மீதி இருக்கும் நான்கு வருடங்கள் இந்த சேவையை நன்றாக செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என்றும் குறிப்பிட்டார்.
மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சானாரப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இந்த சானாரப்பட்டி ஊராட்சியில் 3000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி செயலாளர் மாதவன் மசக்காலியோர், தானாபதியோர் பொதுமக்களிடம் காலில் விழுந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நூதன முறையில் வசூல் செய்தார். மேலும் இதைப்பற்றி கூறிய ஊராட்சி தலைவர் மாதவன் நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்யும் விதமாகத்தான் இவ்வாறு செய்ததாக கூறினார்.
தற்போது நிலுவை வரிகளை போர்க்கால அடிப்படையில் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதுபோன்ற விசித்திரமான மற்றும் அதிரடி வழிமுறைகளைக் கையாள தொடங்கியுள்ளனர்.