நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியான இரு மெகா த்ரில்லர் படங்கள்! 'இக்கா' & 'Nothing To Lose'..!

நெட்ஃபிளிக்ஸ் 'IKKA' & 'Nothing To Lose': இந்த வாரம் ஓடிடியில் பார்க்கலாமா? வேண்டாமா?
நெட்ஃபிளிக்ஸ் திரைப்பட விமர்சனம்
நெட்ஃபிளிக்ஸ் திரைப்பட விமர்சனம்AI
Updated on

இக்கா என்றால் முதன்மையானவர் என்று அர்த்தம்.சீட்டுக்கட்டு விளையாட்டில் ஏஸ் என்னும் சீட்டு முதன்மையானது; படத்தில் இந்த அர்த்தத்தில்தான் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இதுதவிர, இஸ்லாமிய சமூகத்தில் வயதில் பெரியவர்களை 'இக்கா' என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. (உதாரணமாக: மெகாஸ்டார் மம்முட்டியை ரசிகர்கள் 'மம்மூக்கா' என்று அழைப்பது போல).

ஜூலை 10, 2026 முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் தமிழ் டப்பிங்கில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் இது. இது தியேட்டர் ரிலீஸ் அல்ல, நேரடியாக ஓடிடி-யில் வெளியான படமாகும்.

ஸ்பாய்லர் அலெர்ட் (கதைக் களம்):

நாயகன் நேர்மையான,வெற்றிகரமான வக்கீல்.அவன் எடுத்த கேஸ்களில் இதுவரை தோல்வியே இல்லை.ஆனால் மனசாட்சிக்கு விரோதமாக எந்தக்கேசையும் எடுக்க மாட்டான்.நாயகனுக்கு அன்பான மனைவியும், ஒரு மகளும் உண்டு.ஆனால்,மகளுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.மருத்துவ ரீதியான அந்த பிரச்சனையை தீர்த்து வைத்து அவளை காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு வில்லனால் மட்டும்தான் முடியும் என்ற நிலை ஏற்படுகிறது.

ஏனெனில், வில்லன்தான் நாயகனின் மனைவியின் குழந்தைக்கு (மகளுக்கு) உண்மையான பயாலஜிக்கல் அப்பா. நாயகனின் மனைவியும், வில்லனும் முன்னாள் காதலர்கள். கடந்த காலத்தில் அவள் கர்ப்பமானபோது, கருவைக் கலைத்துவிடுமாறு வில்லன் கூற, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, இந்த உண்மைகள் அனைத்தையும் நாயகனிடம் கூறிவிட்டுத்தான் மணம் புரிந்திருக்கிறாள்.

வில்லன் உடைய ஸ்டெம் செல்லை மகளின் உடம்பில். பொருத்தி ஆபரேஷன் செய்தால் தான் மகள் பிழைப்பாள்.இப்படி ஒரு கிரிட்டிக்கலான சூழ்நிலையில் வில்லன் ஒரு கேசில் மாட்டிகொள்கிறான்.போலீஸ் வில்லனை கைது செய்கிறது.வில்லனின் அப்பா அரசியல்வாதி.நாயகனை அணுகி மகனை மீட்டுத்தரும்படி கேட்கிறார்.வில்லனும் நாயகனிடம் இந்த கேசிலிருந்து என்னை விடுவித்தால் உன் மகளின் ஆபரேஷன் வெற்றிகரமாக நடக்க உதவுகிறேன்" என்று நிபந்தனை விதிக்கிறான்.

நாயகனும் வேறு வழி இல்லாமல் வில்லனுக்காக கேசில் ஆஜர் ஆகிறான்.இதற்குப்பின் என்ன நடந்தது? கேசில் நாயகன் ஜெயித்தானா? நாயகனின் மகள் காப்பாற்றப்பட்டாளா? உண்மையில் வில்லன் மேல் குற்றம் உண்டா? அதற்கு தண்டனை கிடைத்ததா? என்பது தான் 'இக்கா' படத்தின் மீதி திரைக்கதை.

IKKA
IKKA Source:news18

நடிகர்களின் பங்களிப்பு:

  • சன்னி தியோல்: நாயகனாக நடித்திருக்கிறார். முகத்தில் ஏனோ பெரிய அளவில் உற்சாகமே இல்லை. இருப்பினும், கோர்ட்டில் வாதாடும் காட்சிகளிலும், மகளுக்காக கவலைப்படும் இடங்களிலும் தனது முத்திரை பதிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • அக்ஷய் கன்னா: வில்லனாக அசத்தியிருக்கிறார். துரந்தர் பாகம் 1 படத்தில் நாயகனை விட வில்லனான இவருக்கு தான் தியேட்டரில் கை தட்டல் கிடைத்தது.ஸ்டைலிஷான நடிப்பு. தெனாவெட்டான உடல்மொழி.

  • தியா மிர்சா: நாயகனின் மனைவியாக ஒரு குடும்பப் பாங்கான நடிப்பை நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

  • திலோத்தமா ஷோம்: கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீலாக நடித்திருக்கிறார். அவரது லாவகமான வாதிடும் திறன் மிக அருமை.

  • சஞ்சீதா ஷேக்: வில்லனின் மனைவியாக சஞ்சிதா ஷேக் கச்சிதமாக பொருந்தியுள்ளார். தன் கணவனை காப்பாற்ற கோர்ட்டில் அவர் படும் பாடு அருமை.

  • டரியா பேடி: நாயகனின் மகளாக டரியா பேடி நடித்திருக்கிறார். இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு.

  • ஷிசிர் சர்மா: வில்லனின் அப்பாவாக அரசியல்வாதிக்கே உரிய அகம்பாவத்தைக் காட்டி நடித்திருக்கிறார்.

  • விஜய் விக்ரம் சிங்: நீதிபதியாகக் (Judge) கச்சிதமாக நடித்துள்ளார். (சமீபகாலமாக இந்திய சினிமாவில் ஜட்ஜ் கதாபாத்திரங்கள் அப்ளாஸ் வாங்குகின்றன, ஆனால் இதில் அதற்கான ரைட்டிங் இல்லை).

  • அகன்ஷா ரஞ்சன் கபூர் & ஜோதி முகர்ஜி: வில்லன் மாட்டிய கேஸில் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், அவளது அம்மாவாகவும் இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

  • இசை: பாடல்களுக்கு மிதூன் மற்றும் பின்னணி இசைக்கு ஜூலியஸ் ஆகியோர் கவனித்திருக்கிறார்கள்.

  • ஒளிப்பதிவு: ஜிஸ்னு பட்டாசார்ஜி. கோர்ட் ரூம் காட்சிகளில் கேமரா மிக அழகாக விளையாடியிருக்கிறது.

  • எடிட்டிங்: ஸ்வேதா வெங்கட் மேத்யூ. படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள்.

  • கதை & இயக்கம்: அல்தே கவுசல் மற்றும் மயாங்க் தேவ்ரி இணைந்து திரைக்கதை எழுத, வசனத்தை மயாங்க் தேவ்ரியும், கதையை அல்தே கவுசலும் எழுதியுள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா இப்படத்தை இயக்கியுள்ளார். (தயாரிப்பு: சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி சப்னா).

சபாஷ் டைரக்டர் (நிறைகள்):

  1. ஓப்பனிங் ஷாட்டிலேயே நேரடியாக கதைக்கு வருவது நல்ல உத்தி. வில்லனின் காரிலிருந்து தெறித்து விழும் பெண் காயத்துடன் இருக்கிறார். இது அப்படியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது.

  2. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை கேள்விகள் கேட்டு நாயகன் குழப்புவது அருமை.

  3. அரசு தரப்பு வக்கீலை சந்திக்கும் நாயகன் தவறுதலாக தனது செல்போனை விட்டுச்செல்வது போல நடிப்பதும்,அவருக்கு வரும் மெசேஜை வக்கீல் படித்து அவர் வலையில் விழுவதும் நல்ல ட்விஸ்ட்

  4. வில்லனின் மனைவி அவனைக் காப்பாற்றப் போடும் டிராமா பக்கா. நாயகன் அந்த பொய் சாட்சியத்தை உடைக்கும் இடம் செம மாஸ்.

  5. கோர்ட் ரூமில் நடக்கும் வாத, விவாதங்களைச் சலிப்பில்லாமல் சுவாரசியமாகக் காட்டிய விதம் குட்.

லாஜிக் மிஸ்டேக்ஸ் (குறைகள்):

  1. வில்லன் ஏற்கனவே பல குற்றங்களை செய்து அனுபவம் உள்ளவன். அப்படிப்பட்டவன் பொதுமக்களின் நடமாட்டம் உள்ள ஒரு மெயின் ரோட்டில், காரில் வைத்து அந்தபெண்ணிடம் தவறாக நடக்க முயல்வதை நம்ப முடியவில்லை. அதை ஏதேனும் ஒரு தனிப்பட்ட இடத்திலோ (Private Place) அல்லது தனி அறையிலோ செய்திருக்கலாமே?

  2. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இறந்தவுடன், வில்லனை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் (Non-bailable Section) போலீஸார் உள்ளே தள்ளியிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

  3. சம்பவம் நடந்தபோது வில்லனின் மனைவி போலீஸிற்குப் போன் செய்து, வில்லன் அந்த நேரத்தில் வீட்டில் இருந்ததாக ஒரு பொய்யான சாட்சியத்தை (Alibi) உருவாக்குகிறாள். இதை போலீஸும் நீதிபதியும் எப்படி அப்படியே நம்புகிறார்கள்? வாய்ஸ் சிந்தசைசர் (Voice Synthesizer) மொபைல் ஆப்ஸ் வந்துவிட்ட இந்த நவீனக் காலகட்டத்தில், வெறும் குரலை வைத்து அலிபி கிரியேட்செய்ய முடியுமா?

  4. குறிப்பிட்ட நேரத்தில் வில்லன் வீட்டில் இருந்தாரா என்பதை அவனது வீட்டு சிசிடிவி (CCTV) காட்சிகளை பார்த்தாலே தெரிந்துவிடுமே, அதை போலீஸ் ஏன் செக் செய்யவே இல்லை?

  5. கேஸ் சக்சஸ் ஆகி வில்லன் ரிலீஸ் ஆனதும் உடனே சக்சஸ் பார்ட்டி வைத்து வில்லன் மாட்டிக்கொள்கிறான். சரியான அவசரக்குடுக்கை என சொல்லத்தோன்றுகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்: 16+ (Adult Content Warning)

கல்கி கமெண்ட்: 'ஆஹா ஓஹோ' என்று பிரமாதமான ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், ஒரு முறை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கத்தக்க ஒரு சுவாரசியமான லீகல் த்ரில்லர் (Legal Thriller) படம்தான் இந்த 'இக்கா'.

ரேட்டிங்: 2.5 / 5.

Nothing To Lose (2026) - சினிமா விமர்சனம் | பிரெஞ்சு / தமிழ்

(எமோஷனல் டிராமா) | ஓடிடி: நெட்ஃபிளிக்ஸ் (Netflix)

1997ம் ஆண்டு இதே டைட்டிலில் வெளிவந்த ஹாலிவுட் படத்தின் கதைக்கும், இந்தப்படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜூலை 8, 2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், ஜூலை 10, 2026 முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் தமிழ் டப்பிங்கில் நேரடியாக கிடைக்கிறது. நோய்வாய்ப்பட்ட மகனைக் காப்பாற்ற போராடும் ஒரு தாயின் உணர்ச்சிப்பூர்வமான கதை என்பதால், ஆண்களை விடப் பெண்களுக்கு இப்படம் நன்றாகக் கனெக்ட் ஆகும்.

ஸ்பாய்லர் அலெர்ட் (கதைக் களம்):

நாயகி ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை. இந்நாள் குத்துச்சண்டை பயிற்சியாளர்.திருமணமாகி கணவனுடன் இனிமையான இல்லறம் நடத்தி வரும் நாயகிக்கு ஒரு பெரிய மனக்குறை; குழந்தை பாக்கியம் இல்லாததுதான். ஹாஸ்பிடல் போய் இருவரும் செக்கப் செய்து கொள்கிறார்கள்.இருவரிடமும் உடல் ரீதியாக, மருத்துவரீதியாக எந்தக்குறையும் இல்லை.ஆனாலும் குழந்தை உருவாகவில்லை.பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி, வேறு ஒரு பெண்ணி கருமுட்டையை தானமாக பெற்று அவளுக்கு குழந்தை பிறக்கிறது.

Nothing To Lose
Nothing To LoseSource:twitter

10 வருடங்கள் கழித்து.....

இப்போது நாயகி தன் மகனுடன் தனிமையில் வாழ்கிறாள்.கணவனுடன் பிரேக்கப் ஆகி விட்டது.காரணம் சொல்லப்படவில்லை.அவ்வப்போது கணவன் வந்து குழந்தையைப்பார்த்து விட்டு செல்கிறான்.நாயகி தன் 10 வயது மகனை தன்னை போலவே ஒரு பாக்சர் ஆக்க வேண்டும் என தீவிரமாகப் பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார்.ஒரு பாக்சிங் போட்டி முடிவில் மகன் மயங்கி விழ ஹாஸ்பிடல் போகிறார்கள். அங்கே டாக்டர் ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார். மகனுக்கு லூக்குமியா என்னும் ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அவனது உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இதற்காக உடல் தானம் வேண்டி பதிவு செய்கிறாள் நாயகி.

நாயகியின் மகன் அட்மிட் ஆன ஹாஸ்பிடலில் பல சிறுவர் ,சிறுமிகள் இதே போல் அட்மிட் ஆகி இருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுவன் உரிய நேரத்தில் உடல் உறுப்பு தானம் கிடைக்காமல் பரிதாபமாக இறந்து விடுகிறான். இதனால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகும் நாயகி, "வரிசைப்படி எல்லாம் காத்திருக்க முடியாது, எனக்கு என் மகன் உயிர் வேண்டும்" என துப்பாக்கியை கையில் எடுக்கிறாள்.

இதனால் டென்ஷன் ஆன நாயகி வரிசைப்படி எல்லாம் காத்திருக்க முடியாது.எனக்கு என் மகன் வேண்டும் என துப்பாக்கியை கையில் எடுக்கிறாள்.அந்த ஹாஸ்பிடலை கன் பாய்ண்ட்டில் தன் கண்ட்ரோலுக்குக்கொண்டு வருகிறாள். நாயகியிடமிருந்து ஹாஸ்பிடலை மீட்க போலீசும்,ராணுவமும் களம் இறங்குகிறது.இதற்குப் பின் நிகழும் விறுவிறுப்பான சம்பவங்கள்தான் 'Nothing To Lose' படத்தின் மீதி திரைக்கதை.

நடிகர்களின் பங்களிப்பு:

  • நவல் மதனி: நாயகியாகப்பிரமாதமாக நடித்திருக்கிறார் நவல் மதனி.இது உண்மை சம்பவமோ?என விக்கிப்பீடியாவில் தேடிப்பார்க்கும் அளவு நாயகியின் உயிரோட்டமான நடிப்பும்,கலக்கலான பர்பார்மென்சும் படத்தை உயர்த்திப்பிடிக்கிறது.இவர் நிஜமாவே ஒரு பாக்சர்தானோ?என எண்ணும்படி உடற்கட்டை பக்காவாய் மெயிண்ட்டெயின் செய்திருக்கிறார். முக பாவனைகளில் ஆயிரம் ஜோதிகாக்கள் நிரம்பி வழிகிறார்கள்.

  • குல்லாம் கோக்ஸ்: நாயகனாக நடித்துள்ள இவருக்குப் படத்தில் அதிக வேலை இல்லை. முதல் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். வந்தவரை இவரது நடிப்பு ஓகே.

  • மகனாக நடித்த சிறுவன் அமைதியாக வந்து போகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற குழந்தைகள் கவனம் ஈர்க்கின்றன.

இயக்கம்: திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் லுடோவிக் கோல்பு ஜஸ்டின்.

முதல் பாதி திரைக்கதையை உணர்ச்சிப்பூர்வமான எமோஷனல் டிராமாவாக எடுத்தவர்கள் பின் பாதி திரைக்கதையை 2016ல் வெளிவந்த அருவி படத்தின் டெம்ப்ளேட்டில் க்ரைம் டிராமாவாக மாற்றிவிட்டார்கள். இது படத்தின் நம்பகத்தன்மையைக் சற்றுக் குறைக்கிறது. இருப்பினும் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் தரம் மிக்கவை.

சபாஷ் டைரக்டர் (நிறைகள்):

  1. நாயகி பாக்ஸராகக் கோச்சிங் கொடுக்கும் அந்த ஓப்பனிங் சீன் (Opening Scene) அத்தனை உயிரோட்டமாக உள்ளது.

  2. மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சிகள் உயிரோட்டமானது.

  3. ஹாஸ்பிடலில் மகனை சந்திக்க வரும் அப்பாவை மகன் கண்டுகொள்ளாதது,அப்பா வருத்தப்படுவது நல்ல செண்ட்டிமெண்ட் சீன்.

  4. எப்படியாவது அந்தப்பையன் பிழைத்து விட வேண்டும் என்ற எமோஷனல் கனெக்ட்டை நமக்குத்தந்து விடுகிறது.காரணம் நாயகியின் பிரமாதமான ,நுட்பமான நடிப்பும் ,அவரது கேரக்டர் டிசைனும்.

  5. மருத்துவமனையில் மகனுக்குத் தலைமுடி உதிர்வதை கண்டு அவன் கேள்வி கேட்பதும், அதற்கு நாயகி ஏதோ பதில் சொல்லிச் சமாளிப்பதும், பின்னர் அவனுக்கு உண்மை தெரியவரும் இடங்களும் பெர்ஃபெக்ட் காட்சிகள் (Perfect Scenes).

லாஜிக் மிஸ்டேக்ஸ் (குறைகள்):

  1. நாயகி துப்பாக்கியைக் கையில் எடுத்து திரைக்கதை ஹோஸ்டேஜ் டிராமா (Hostage Drama) மோடுக்குள் போகும்போதே, கதையின் நம்பகத்தன்மை நட்டாற்றில் விடப்படுகிறது.

  2. ஒரே ஒரு சாதாரணப் பெண்ணை சமாளிக்க போலீஸ், ராணுவம் எல்லாம் பெரும் பாடுபடுவதாக காட்டுவது மிக ஓவர்.

  3. முதல் பாதி திரைக்கதையில் "எப்படியாவது அந்த சிறுவன் பிழைத்துவிட வேண்டுமே" என்று ஆடியன்ஸ் நினைப்பது போல், பின் பாதியில் நாயகி துப்பாக்கியைக் கையில் எடுத்ததும் "சீக்கிரம் படம் முடிந்தால் தேவலை" என்று எண்ணத் தோன்றுகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்: 16+ (Adult Content Warning)

கல்கி கமெண்ட்: பெண்களுக்கும்,பெற்றோருக்கும் மிகவும் பிடிக்கும்.போஸ்டர் டிசைனைப்பார்த்து ,ட்ரெய்லர் பார்த்து இது ஒரு க்ரைம் ஆக்சன் திரில்லர் என்று ஏமாந்து படம் பார்ப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.

ரேட்டிங்: 2.5 / 5.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? பெற்றோரின் இந்த விவரம் கட்டாயம்!
நெட்ஃபிளிக்ஸ் திரைப்பட விமர்சனம்
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்..! காலையிலேயே அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.!
நெட்ஃபிளிக்ஸ் திரைப்பட விமர்சனம்
logo
Kalki Online
kalkionline.com