#BREAKING : சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு..!

Death
DeathImg credit: freepik
Published on

தவெக கட்சியின் 3ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு பிறகு, இன்று சேலத்தில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 தினங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.தவெக தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகை தந்தார்.சரியாக பன்னிரண்டு 40 மணிக்கு விஜய் தனது ரசிகர்களிடம் முன் தோன்றினார்.

சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறலால் சூரஜ் உயிரிழந்தார். கூட்டத்தில் பங்கேற்ற போது வலிப்பு ஏற்பட்ட தவெக நிர்வாகியை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com