ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த சமந்தா & வருண் தவான்!

சமந்தா
சமந்தா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். சமந்தாவுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் ஜனாதிபதி திரெளபதி முர்மு இணைத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் சமந்தா.

இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து எடுத்துள்ள புகைப்படம் சமூக தளங்களில் பரவி வருகிறது.

நடிகை சமந்தாவுடன் , பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

logo
Kalki Online
kalkionline.com