'SBI JanNivesh SIP' திட்டம்: மாதம் ரூ.250 முதலீட்டில் ரூ.17 லட்சம் ரிட்டர்ன்ஸ்..!

கிராமப்புற, நகர்ப்புற மற்றும் முதல் முறை முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
SBI Mutual Fund JanNivesh SIP
SBI Mutual Fund JanNivesh SIP1st image - image credit indiatoday.in
Updated on

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India - SBI) உடன் இணைந்து 'ஜன் நிவேஷ் எஸ்ஐபி (JanNivesh - SIP) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஒரு பிரபலமான முதலீட்டு வழியாகும். சமீபகாலமாக SIP ஒரு பிரபலமான முதலீட்டு முறையாகத் திகழ்கிறது. சிறிய முதலீடுகள் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்க உதவுவதால், சமீப காலமாக SIP முதலீடுகள் வேகமாக வளர்ந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்து, கணிசமான நிதியை உருவாக்க முடியும். இது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (எஸ்ஐபி திட்டம் )இணைந்து அறிமுகப்படுத்திய மைக்ரோ-எஸ்ஐபி (Micro-SIP) திட்டமாகும்.

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நாட்டின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும், இதன் மொத்த சொத்துக்கள் சுமார் ரூ.11 லட்சம் கோடி நிர்வகிக்கப்படுகின்றன. பொதுமக்கள் எஸ்பிஐயின் நேரடி தளங்களில் முதலீடு செய்யும்போது கமிஷன் கட்டணங்கள் எதுவும் இருக்காது.

குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களையும் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு வெறும் ரூ. 250 என்ற குறைந்தபட்ச முதலீட்டில் எவரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தொடங்கலாம். இது சந்தை சார்ந்த முதலீடு என்பதால், உங்கள் லாபம் நிலையானதாக இருக்காது. எனினும், நீண்ட கால முதலீட்டில் தோராயமாக 12% முதல் 15% வரை வருமானம் எதிர்பார்க்கலாம்.

கிராமப்புற, நகர்ப்புற மற்றும் முதல் முறை முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் 'எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்' (SBI Balanced Advantage Fund) எனும் கலப்பு வகை நிதியில் (Hybrid Fund) முதலீடு செய்யப்படுகிறது.

இதற்கு முன்பும் சில மியூச்சுவல் பண்டுகள் எஸ்ஐபி திட்டத்தில் ரூ.100 மற்றும் ரூ.500 என்ற அளவில் முதலீடுகளை அனுமதித்தன. ஆனால் அவற்றின் செயல்பாட்டு செலவுகள் அதிகமாக இருந்ததால் அவை வெற்றி பெறவில்லை.

இது நல்ல வருமானத்துடன், ரிஸ்கை நிர்வகிக்க ஈக்விட்டி மற்றும் கடன் இரண்டிலும் முதலீடு செய்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.250 என்ற சிறிய தொகையில் இந்த ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இத்திட்டத்தில் மாதந்தோறும் முதலீடு செய்வதன் மூலம், 17 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை உருவாக்க முடியும்.

jannivesh sip return rate|எஸ்ஐபி திட்டம்
jannivesh sip return rateimage credit-jezzmoney.com

சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக SBI மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் கூறியுள்ளது. பயனர்கள் வெறும் ரூ.250-ல் தொடங்கும் ஜன் நிவேஷ் SIP-ல் இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதவர்கள் கூட தங்கள் சேமிப்பை முதலீடாக மாற்ற முடியும். இதனால்தான் ஜன் நிவேஷ் SIP-யில் குறைந்தபட்ச முதலீடு ரூ.250 ஆக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், இது சமநிலையான (Balanced) ஃபண்ட் என்பதால் ஆபத்து ஓரளவு குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஏன் குறியீட்டு நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
SBI Mutual Fund JanNivesh SIP

அந்த வகையில், எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டில் ஜன் நிவேஷ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.250 எஸ்ஐபி செய்து வந்தால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 12% வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில், உங்கள் பரஸ்பர நிதியம் (Mutual Fund) மூலம் உங்கள் முதலீடு சுமார் ரூ.17 லட்சமாக அதிகரித்திருக்கும். இதில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.90,000.

இதுவே நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.70 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இதில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.30,000. நீங்கள் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.3.8 லட்சமாக அதிகரித்திருக்கும். இதில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.60,000.

நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது SBI Mutual Fund மற்றும் Groww, Paytm போன்ற நிதி சார்ந்த செயலிகள் மூலமாகவும் தொடங்கலாம். அதாவது SBI மியூச்சுவல் ஃபண்ட் SIP அடிப்படையிலான திட்டத்தை SBI Yono App, Paytm, Zerodha மற்றும் Groww போன்ற டிஜிட்டல் ஃபின்டெக் தளங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் மொபைலில் இருந்தே எளியமுறையில் SIP முதலீட்டைத் தொடங்க முடியும்.

முக்கியமாக முதலீடு தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்து, அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
50+ வயதினருக்கான பினான்சியல் பிளானிங்: சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?
SBI Mutual Fund JanNivesh SIP

உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் முதலீடு செய்யுங்கள்.

Disclaimer : இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com