தமிழ் தெரிந்தால் போதும்..! SBI வங்கியில் 2050 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்க..!

bank jobs
bank jobs
Published on

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், எஸ்பிஐ வங்கி வட்டார அதிகாரி வேலைவாய்ப்பிற்கான 2050 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்புகள் நேற்று வெளியாகியுள்ளன. இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://sbi.bank.in/ என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்18.02.2026

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் SBI வங்கியில் வட்டார அதிகாரி பணிக்கான காலியிடங்கள் உள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ளூர் மொழி கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும். இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பணிபுரிய தமிழ் மொழி படித்திருப்பது கட்டாயம் . இவர்களுக்கு தமிழ் மொழியில் சகஜமாக பேசவும் , எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். 10 ஆம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டவர்களுக்கு தகுதித் தேர்வு கிடையாது. இந்த மாநிலப் பகுதியில் மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.

அவை பின்வருமாறு ,

  • பொதுப்பிரிவினர் - 69 ,

  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 16, 

  • ஒபிசி - 44,

  • எஸ்சி - 24, 

  • எஸ்டி - 12,  

  • மாற்றுத்திறனாளிகள் –7 

கல்வித்தகுதி: 

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் பொறியியல் , மருத்துவம், பட்டயக் கணக்காளர் (CA), செலவு கணக்காளர் (Cost Accountant) ஆகிய படிப்புகளை படித்து முடித்தவர்களும் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பணியில் சேர வயது வரம்பு: 

2025 டிசம்பர் 31 ஆம் தேதிப்படி , விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. மேலும் 30 வயதைக் கடந்தும் இருக்கக் கூடாது. அதாவது  01.01.1996 க்கு பின்னர் அல்லது 31.12.2004 முன்னர் பிறந்திருக்க கூடாது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 வயது வரை , வயது வரம்பில் தளர்வு தரப்படும். 

பணிக்கான அனுபவம்:

வணிக வங்கி அல்லது கிராமப்புற வங்கியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிக்கு அடிப்படை சம்பளம் ₹48,480 - அதிகபட்சமாக ₹85,920 வரை கிடைக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க https://sbi.bank.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ₹750 .எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த கட்டணும் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

எஸ்பிஐ வங்கி வட்டார அதிகாரி வேலைவாய்ப்பிற்கு நான்கு கட்ட தேர்வு முறைகள் உள்ளன. முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் , பின்னர் தெரிவு செய்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்றால் இறுதியில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். உள்ளூர் மொழித் தேர்வில் வெற்றி பெற்றதும் பணியிடம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் போதும் , பணம் செலுத்தும்போதும் ஏதேனும் சிக்கல் இருந்தால் , 022-22820427 என்ற எண்ணிற்கு , காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு விபரம் அறிந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நிபா வைரஸ்: அச்சம் தேவையா? உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன..?
bank jobs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com