பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

சென்னை உட்பட கனமழை பொழியும் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

சென்னை உட்பட கனமழை பொழியும் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

தமிழ்நாடு முழுக்க நேற்று பரவலாக கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில் நேற்று மழையின் தீவிரம் உச்சம் அடைந்தது. இன்று மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது. கனமழை ஒட்டி இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 கனமழை
கனமழை

சென்னையில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழையால் மழை வெள்ளம் போன்ற பிரச்சனைகளுக்கு செல்போன் எண்கள், வாட்ஸ் அப் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . மழைநீர் தேக்கம், குடிநீருடன் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சனைகளுக்கும், நம்ம சென்னை செயலி மூலமும் மக்கள் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது. குடிநீர் வரவில்லை, மின்வெட்டு உள்ளிட்ட புகார்களை 1913 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தென் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரியில், என 23 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில், இன்று மிதமான மழை பெய்யும்; சில நேரங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும்.

கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும். ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com