அழிந்துப்போன உயிரினத்தை க்ளோனிங் முறையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகமும் அதில் உள்ள மிருகங்களும் ஒரேடியாக தோன்றவும் இல்லை, ஒரேடியாக அழிவதும் இல்லை. அழியப்போவதும் இல்லை. ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு இனம் தோன்றி வளர்ந்து பெருகுகிறது. ஒரு உயிரினத்திலிருந்து எத்தனையோ இனங்கள் தோன்றலாம். மறையலாம். அதற்கு ஒரு சாட்சிதான் குரங்கிலிருந்து மனிதன் வந்தது. ஒரே இரவில் குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. எத்தனையோ ஆண்டுகள் சிறிது சிறிதாக உடல் உறுப்புகள் மாறி மனிதனாக வளர்ந்தான். இப்படிதான் உலகில் பல்வேறு உயிரினங்கள் தோன்றின. மறைந்தன.
அதேபோல் அறிவியல் வளர்ச்சியானது இரு வேறு உயிரினங்களை ஒன்றாக்கி ஒரு புது விலங்கினத்தை உருவாக்குகிறது. அழிந்துப்போன உயிரினங்களையும் உருவாக்குகிறது. இது அறிவியல் உலகின் அதிசய டெக்னிக் என்றே கூறலாம்.
அப்படித்தான், சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு கொடிய ஓநாய் (Dire Wolf ) இனத்தை மரபணு பொறியியல் மூலம் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த சாதனையை அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.
இவர்கள் 13 முதல் 72 ஆயிரம் வருடங்கள் முன்னதாக வாழ்ந்த ஓநாய் இனத்தின் டிஎன்ஏவை கண்டுபிடித்தனர். அவற்றுடன் சாம்பல் ஓநாய்களின் டிஎன்ஏ உடன் இணைத்து இரண்டு குட்டி ஓநாய்களை உருவாக்கியுள்ளனர். அந்த குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவை பிறந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த ஓநாய்களை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் பார்க்கமுடியும்.
இந்த அறிவியல் முன்னேற்றமானது, பல அழிந்துப்போன உயிரினங்களை மீண்டும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. கம்பளி மம்மத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி போன்ற அழிந்துபோன பிற உயிரினங்களை திரும்ப கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
அதே நிறுவனம் இதுபோல் அழிந்துப்போன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இதன்மூலம் டைனோசர்கள் வந்தால் கூட ஆச்சர்யத்திற்கில்லை. ஆனால், அவை வராதவரைக்கும்தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும் என்பதுதான் உண்மை.