இந்தியாவின் ஜனாதிபதி தலைமையில் SCO 23-வது உச்சி மாநாடு!

இந்தியாவின் ஜனாதிபதி தலைமையில் SCO 23-வது உச்சி மாநாடு!
Published on

இந்தியாவின் ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் SCO 23-வது உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. முதல்முறையாக இந்தியாவின் தலைமையின் கீழ் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) தலைவர்கள் கவுன்சிலின் 23வது உச்சிமாநாடு இணைய வழியில் 4 ஜூலை 2023 நடைபெறுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின் போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின. இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடு கடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளும், அதாவது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாரம்பரியத்தின்படி, துர்க்மெனிஸ்தானும் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. செயலகம் மற்றும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (SCO RATS) ஆகிய இரண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு(SCO) அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள். இங்கிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, யூரேசிய பொருளாதார ஒன்றியம், சிஐசிஏ ஆகிய ஆறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com