மியூச்சுவல் ஃபண்ட் வச்சிருக்கீங்களா? பழைய ரூல்ஸ் எல்லாம் காலி! – SEBI கொண்டு வந்த திடீர் மாற்றம்..!!

முதலீட்டாளா்களின் வசதிக்காக செபி, ‘லைஃப் சைக்கிள் ஃபண்ட்ஸ்’ என்ற புதிய வகை மியூச்சுவல் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
SEBI
SEBI.
Published on

மியூச்சுவல் ஃபண்ட்(Mutual Funds) பணத்தை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சூப்பரான அப்டேட் சொல்லி இருக்காங்க செபி(Sebi). அந்த வகையில் லைஃப் சைக்கிள் ஃபண்ட்ஸ்(Life Cycle Fund) என்ற புதிய வகை மியூச்சுவல் ஃபண்டுகளை செபி அறிமுகப்படுத்தியுள்ளது. அதேநேரம், இதுவரை நடைமுறையில் இருந்த ‘சொல்யூஷன் ஓரியண்டட்’ நிதித் திட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த ஓய்வூதிய நிதி (Retirement Funds) மற்றும் குழந்தைகளுக்கான நிதி (Children's Funds) போன்ற 'Solution Oriented Funds' இனி இந்த LCFs வகைக்குள் அடங்கும்.

முதலீட்டாளா்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதும், அவா்கள் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரியபடுத்துவதும் தான் இப்புதிய மாற்றங்களின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த Life Cycle Funds என்பது ஒரு குறிப்பிட்ட முதிர்வு தேதியுடன் (Maturity Date) கூடிய ஓப்பன்-எண்டட் திட்டங்களாகும். இவற்றின் முக்கிய அம்சம், 'க்ளைடு பாத்' (Glide Path) எனப்படும் ஒரு முறை.

இதையும் படியுங்கள்:
பங்கு வெளியீட்டு விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள செபி!
SEBI

இதன் மூலம், முதலீடு செய்யப்படும் காலம் செல்லச் செல்ல, ஃபண்டின் அசெட் அலோகேஷன் (Asset Allocation) தானாகவே மாறும். அதாவது, முதலீட்டின் தொடக்கத்தில் அதிக லாபம் தரக்கூடிய, ஆனால் சற்று அபாயம் உள்ள பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்யப்படும்.

திட்டத்தின் முதிா்வுக் காலம் நெருங்கும்போது, ஆபத்தைத் தவிா்க்க பங்குச்சந்தை முதலீடு குறைக்கப்பட்டு, பாதுகாப்பான கடன் பத்திரங்களில் முதலீடு படிப்படியாக மாற்றப்படும். அதாவது, இது முதலீட்டாளரின் இலக்கு அல்லது ஓய்வுக்காலம் நெருங்க நெருங்க, ஆபத்தை (Risk) குறைத்து, பாதுகாப்பான முதலீடுகளை (Debt/Equity) தானாகவே சரிசெய்யும் ஒரு புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.

இதில் 5 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இவை 5 ஆண்டு இடைவெளிகளில் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு ஃபண்டின் பெயரிலும் அதன் முதிர்வு ஆண்டு குறிப்பிடப்படும். உதாரணமாக, 'Life Cycle Fund 2045' அல்லது 'Life Cycle Fund 2055' என இருக்கும்.

முதிர்வு தேதிக்கு அருகில் வரும்போது, அதாவது கடைசி 5 ஆண்டுகளுக்குள் ஃபண்டின் முதிர்வு குறையும்போது, ஃபண்டுகள் ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் (Equity Arbitrage) உத்திகளில் 50% வரை முதலீட்டை அதிகரிக்கலாம். அதே சமயம், மொத்த ஈக்விட்டி முதலீடு 65% முதல் 75% வரையறைக்குள் இருக்க வேண்டும்.

செபி (SEBI) அறிமுகப்படுத்திய இது, நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றது; முதலீட்டு காலத்தின் தொடக்கத்தில் அதிக ஈக்விட்டி (வளர்ச்சி), இறுதியில் அதிக டெப்ட் (பாதுகாப்பு) என தானாகவே மாறும்.

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு இலக்குகள்(goal) இருக்கும். ஒருத்தருக்கு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும், ஒரு சிலருக்கு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஒரு சிலர் ரிட்டயர்மென்ட் பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டங்களை வகுத்து வைத்திருப்பார்.

அந்த வகையில் லைப் சைக்கிள் ஃபண்ட், ஓய்வுக்காலம், குழந்தைகளின் கல்வி போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு சிறந்தது. இது ஒரு முன் வரையறுக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி, வயது அல்லது கால அவகாசத்திற்கு ஏற்ப முதலீட்டு கலவையை சரிசெய்கிறது.

இதையும் படியுங்கள்:
தேசியப் பங்குச் சந்தை முன்னாள் தலைமை நிர்வாகி: சாமியாருடன் சேர்ந்து ஊழல் என செபி குற்றச்சாட்டு!
SEBI

நீண்ட கால முதலீடு செய்ய விரும்பும் மற்றும் ஓய்வுக்கால திட்டமிடலுக்கு (Retirement planning) தானியங்கி முறையில் முதலீடு செய்ய விரும்பும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு இந்த நிதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com