#BREAKING : தேர்தல் முடிந்ததும் ராஜினாமா செய்ய போகிறேன் - செல்வப்பெருந்தகை..!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தலுக்கு பின் தனது பதவியை ராஜினா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதில் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்கு வகித்தார். இதனிடையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு பின்பாக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என கேள்விகள் எழுந்தது.

இதற்கு பல கரணங்கள் கூறப்பட்டாலும் தமிழக கூட்டணி விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது ராகுல்காந்தி அதிருப்தி என்பனது தான் முக்கியமான கரணம் என சொல்லப்படுகிறது.2027 வரை செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் இருந்தாலும் பதவியை ராஜினாமா செய்கிறாராம்.

இன்னொருபுறம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு அளிக்கப்பட்டதன் பெயரில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் அலைய வேண்டாம்! - மே மாதம் முதல் கிளாம்பாக்கத்திலேயே இறங்கலாம்..!
செல்வப்பெருந்தகை
logo
Kalki Online
kalkionline.com