விஜய்யின் நெல்லை பிரச்சாரத்திற்கு அனுமதி! 51 நிபந்தனைகள் விதிப்பு!

Vijay
Vijay
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை(ஏப்ரல்.8) நெல்லையில் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக 51 நிபந்தனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜய்க்கு மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அந்த கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் , விஜயின் பெயரால் தன்னைப் போன்ற  அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெகவின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் ஆதரவும் தலைவர் விஜய்க்கு உள்ளது. அத்தனை பேரும் தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

மற்ற கட்சிகளுக்கெல்லாம் எந்த அளவுக்கு நிபந்தனைகள் வைக்கப்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் என்னென்ன நிபந்தனைகளை பின்பற்றி பரப்புரை மேற்கொள்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு மட்டும் நிறைய தடைகளை விதித்துக் கொண்டே வருகிறார்கள்.

 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் , விஜயின் பரப்புரைக்கு ஏராளமான தடைகள் வைக்கப்படுகிறது , சென்னை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை. என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
மண்ணெண்ணெய் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? - இதன் பின்னணியில் உள்ள 'சாய' ரகசியம் இதுதான்!
Vijay
logo
Kalki Online
kalkionline.com