காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷ் மகாஜன் பாஜகவில் இணைந்தார்!

மூத்த தலைவர் ஹர்ஷ் மகாஜன்
மூத்த தலைவர் ஹர்ஷ் மகாஜன்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ஷ் மகாஜன் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அவர் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ஹர்ஷ் மகாஜன்
ஹர்ஷ் மகாஜன்

இது குறித்து ஹர்ஷ் மகாஜன் பேசுகையில் "காங்கிரஸ் கட்சி தற்போது இலக்கு இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. நல்ல தலைவரும், தொலைநோக்குப் பார்வையும் நம்பிக்கையான அடிமட்ட தொண்டர்களும் இல்லை" என கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com