இந்த ஆண்டு ஏழு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது!

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

2024 ஆம் ஆண்டில் ஏழு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் - மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துகின்றன.

ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டபைபேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சட்டப்பேரவையில் இந்தியார் எதிர்க்கட்சி கூட்டணிக்கும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஒரு இடம்கூட இல்லை.

ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பங்கு சிறியதுதான்.சிக்கிமில், 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 31 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி  உறுப்பினர்கள் வைத்திருக்கும் நிலையில், இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி முன்னிலையில் இல்லை.

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் 49 எம்எல்ஏக்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக்கு  வெறும் நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும்.

ஹரியானாவின் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 52 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 32 எம்எல்ஏக்களும் உள்ளனர். மகாராஷ்டிராவில், மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 189 உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரத்தில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் 81 உறுப்பினர் மட்டுமே உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தைப்பூசத் திருநாளிலே!
இந்திய தேர்தல் ஆணையம்

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 29 எம்எல்ஏக்களுடன் ஒப்பிடும்போது, ​​48 எம்எல்ஏக்களுடன் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி வலுவாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com