ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விழுந்ததில், அதில் பணியாற்றிய 16 பேர் மாயமாகியுள்ளனர். மேலும் அந்த 16 பேரில் 13 பேர் இந்தியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உலகளவில் சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் நிறைய இயங்கி வருகின்றன. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் எண்ணெய் கப்பல்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கும். அந்தவகையில் பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் டேங்கரில் கொமரேஸ் நாட்டுக் கொடி இருந்தது.
அந்த கப்பல் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஏமன் துறைமுக நகரமான ஏடனை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இருக்கும் ஓமன் டுக்ம் துறைமுகத்திற்கு அருகே அந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்துள்ளது. இந்த அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்து முக்கிய அங்கமாக உள்ளது.
ப்ரெஸ்டீஜ் பால்கன் என்பது 2007 இல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் கப்பல். பொதுவாக இதுபோன்ற கப்பல்கள் சிறிய தூர பயணத்திற்காக மட்டுமே செய்யப்படும்.
இந்த கப்பலில் சுமார் 16 பேர் பணியாற்றி வந்தனர். இதில் இலங்கையை சேர்ந்தவர்கள் 13 பேர் என்றும், மீதமுள்ள 13 பேருமே இந்தியர்கள் என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், எந்த அளவுக்கு எண்ணெய் கடலில் கலந்துள்ளது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். 16 பேர் மாயமான சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமானவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி, அவர்களது குடும்பத்தினர் அந்த நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.