

விமானங்களில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியதாவது.
கடந்த 2025 ஜனவரி முதல் தற்போது வரை ஆறு விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப சிக்கல்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
மொத்தம் 754 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் , 377 விமானங்களில் அதிலும் குறிப்பாக ஏர் இந்தியாவின் 191 விமானங்கள், இண்டிகோவின் 148 விமானங்கள், ஸ்பைட்ஸ் ஜெட் நிறுவனத்தின் 16 விமானங்கள் ,ஆகாசா நிறுவனத்தின் 14 விமானங்களில் தொடர்ச்சியாக குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
டி.ஜி.சி.ஏ என்ற விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 3,890 கண்காணிப்பு குழுக்கள், 56 ஒழுங்குமுறை தணிக்கைகள், 84 வெளிநாட்டு விமானங்களில் திட்டமிடாமல் 874 திடீர் சோதனைகளையும், 550 இரவு நேர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காகவே டி. ஜி .சி .ஏ 637 லிருந்து 1063 ஆக பணியிடங்களை உயர்த்தி தொடர்ந்து ஆய்வு நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி கூறும் போது, பொதுவாக விமான அமைப்புகளை ஏ முதல் டி என்ற ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் வகைப்படுத்துவர். இதில் டி வகை விமானங்களில் உள்ள இருக்கைகள், தட்டு மேசைகள், பொழுதுபோக்கு திரைகள் போன்ற அத்தியாவசியமற்ற பகுதிகளையே குறிக்கும்.
இந்த டி வகை விமானங்களிலேயே பெரும்பாலான குறைகளை டி.ஜி.சி.ஏ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால் இதனால்' பயணியர் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை 'என்று கூறியுள்ளார்.