ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு!

Slovakia Prime minister
Slovakia Prime minister

ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை படுகொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது அவர் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியா என்ற நாடு, போலந்து, உக்ரைன், ஹங்கேரி, ஆஸ்திரியா, செக் உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்துக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் பிரதமர், ராபர்ட் ஃபிகோ ஆவார். ரஷ்ய ஆதரவு தலைவராக இருக்கும் ஃபிகோ நான்காவது முறையாக அந்த நாட்டின் பிரதமராக உள்ளார். நாட்டின் வெளியுறவு கொள்கையை ரஷ்யாவுக்கு ஆதரவாக வகுத்துள்ளதாக ராபர்ட் ஃபிகோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஸ்லோவாக்கியாவின் தலைநகரான  பிராடிஸ்லாவில் இருந்து 150 கிமீ வடகிழக்கே உள்ள ஹண்ட்லோவாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ராபர்ட் நேற்று பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்தான் அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராபர்ட் ஃபிகோவின் உடலில் குண்டு பாய்ந்தது. ராபர்ட் ஃபிகோவின் அடிவயிற்றில் குண்டு துளைத்ததால் அவர் தரையில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் யார் என்றும், அவருடைய பின்னணி பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை ஒரு தகவல் கூட இன்னும் வெளியாகவில்லை. மேலும் இதற்கு ஜோ பைடன், புதின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கண் மூடித்தனமானது, கொடூரமானது என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா? வேட்புமனுவில் விவரம்!
Slovakia Prime minister

ராபர்ட் குண்டடிப்பட்டு கீழே விழுவது மற்றும் அவரை தூக்கி காரில் ஏற்றுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பார்ப்பவர்களைப் பதறவைக்கும் அந்த வீடியோக்கள், பலரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com