

நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி 10 மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையில் இரண்டாவதாக பெயர் இடம்பெற்ற நிலையில் சிபிசிஐடி காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணை பார்க்க வந்த நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் அவரை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து அவருடைய சகோதரன் முதலாவதாக கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கொலைக்கு உதவி செய்ததாக உதவி ஆய்வாளரும் அவரின் தந்தையுமான சரவணன் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரது உறவினர் ஜெயபாலும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே இந்த சம்பவங்கள் நடைபெற்று கைது செய்யப்பட்டது.
மாற்று ஜாதிப் பெண்ணை காதலித்த கவின் கொலை வழக்கில் அவரது காதலியின் சகோதரன் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையாக கைது செய்தனர். தந்தை ஏற்கனவே கைதான நிலையில் தாய் தற்போது கைதாகி உள்ளார்.
இவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நெல்லை 2வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.