வெள்ளி முதலீட்டில் 50% இழப்பா?தங்கத்தின் அசுர விலையேற்றத்திற்குப் பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்

வெள்ளி முதலீட்டில் 50% இழப்பா?வெள்ளி மறுவிற்பனையில் நடக்கும் நஷ்டம் மற்றும் சர்வதேச பதற்றங்களால் தங்கம் வெள்ளி விலையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் இதோ.
Gold and silver
Gold And silver
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஆபரணங்களைப் பொறுத்தவரையில் தங்கம் எப்போதும் ராஜ உலோகம் தான் , மற்ற உலோகங்கள் அப்போது விலை அதிகரித்து வந்தாலும் தங்கத்திற்கு இணையாக அதன் மதிப்பில் உயர்வது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கத்தை விட பிளாட்டினத்தின் விலை அதிகமாக இருந்தது. ஆனால் , தற்போது பிளாட்டினத்தை விட தங்கத்தின் மதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள அதீத ஆசைதான்.

அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் தங்கத்தின் மதிப்பு கிராமங்களில் இருந்து மாநகரங்கள் வரை ஒரே மாதிரியான ஈர்ப்பில் மக்களிடத்தில் உள்ளது. தங்கத்தின் மீதான நம்பகத்தன்மையே அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வெள்ளி விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்த வருடத்தில் ஆரம்பத்தில் 1 கிலோ வெள்ளி விலை ₹4.2 லட்ச வரை உயர்ந்திருந்தது. வெள்ளியின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தததால் பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர்.

இதனால், தங்கத்தை போன்றே வெள்ளியும் ஒரு மதிப்பு மிக்க ஆபரண முதலீடாக கருதப்பட்டது. ஆனால். உள்ளூர் சந்தைகளில் வெள்ளியின் விற்பனை விலை அதிகமாக இருந்தாலும் கூட , அதை வாடிக்கையாளர்கள் மறு விற்பனை செய்யும் போது அன்றைய விலை நிலவரத்தில் 50% அளவிற்கே வியாபாரிகள் வாங்கிக் கொண்டனர். இதனால். தங்கள் முதலீடாக கருதும் ஒரு உலோகம் , அதை வாடிக்கையாளர்கள் விற்பனை செய்யும் பொழுது பாதிக்கு பாதி அளவு நஷ்டம் ஏற்படுவதால், வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கு தடாலடியாக குறைந்து போனது.

பாரம்பரிய மிக்க இந்திய சந்தைகளில் வெள்ளிக்கு வட இந்திய மாநிலங்களில் அதிக மவுசு உள்ளது. வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றிற்கு வட இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் தென்னிந்தியாவில் வெள்ளிப் பொருட்களுக்கு குறைந்த பட்சம் முக்கியத்துவம் இருந்தாலும் வெள்ளி ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் மிகவும் குறைவு.

RBI Rules for Gold & Silver
Gold & Silver

வெள்ளியின் விற்பனை விலையும் தங்கத்தின் விற்பனை விலையும் தங்கம் வெள்ளி விகிதம் (Gold to Silver Ratio) என்ற அளவில் ஒப்பிடப்படுகிறது. வெள்ளி விலை உச்சத்தில் இருந்த காலத்தில் 1 கிலோ வெள்ளிக்கு 33 கிராம் தங்கம் ஈடாக இருந்தது. இந்த நிலை தற்போது அடியோடு மாறி உள்ளது.இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கம் ₹13,937 விற்பனையாகிறது. இந்த கணக்கில் 15 கிராம் தங்கத்தின் விலை அளவிற்கு 1 கிலோ வெள்ளி விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.

ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ₹1,39,370 விற்பனையாகும் நிலையில் வெள்ளி விலை ₹2,00,000 உள்ளது. இதனால் ரீடெயில் சந்தைக்கான தங்கம் வெள்ளி விகிதம் 69.68 ஆக உள்ளது. அதே நேரம் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹1,38,825 , 1கிலோ வெள்ளி விலை ₹1,82,212 உள்ளது, இதனால் எம்சிஎக்ஸ் சந்தைக்கான தங்கம் வெள்ளி விகிதம் 76.18 ஆக உள்ளது.

மீண்டும் ஈரான் அமெரிக்கா போர் தீவிரமடையும் நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கம் வெள்ளி விலை நிலையில்லாமல் இருக்கலாம். இது போன்ற நேரங்களில் தங்கம் விலை 1 லட்சத்திற்குள் சரிவடைய இருப்பதாகவும் , வெள்ளியின் மேலும் வீழ்ச்சியடைந்து ₹ 1,00,00 - 1,300,00 அளவில் குறைய உள்ளதாக பொருளாதரா நிபுணர்கள் கூறுகின்றனர்.