மே 27 முதல் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்..!

‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யின் தொடக்க விழா, வருகிற 27-ம்தேதி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
Bhavaneeswari IPS, CM Vijay
Bhavaneeswari IPS, CM Vijay
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய காவல்துறைப் பிரிவு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force SSF)ஆகும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட த.வெ.க தலைவர் விஜய் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்துக்கு 2-வது கையெழுத்துபோட்டார். அதனை தொடர்ந்து இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி (IG) பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக சேலம் உள்ளிட்ட பல மாநகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இப்படை தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியைத் தொடங்கியுள்ளது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக இந்த சிறப்பு படை இயங்கும். குறிப்பாக பஸ் ஸ்டாப், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அதிரடிப்படையின் இருப்பு அதிகப்படுத்தப்படும்.

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த படைக்கு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற பெயரை ஐஜி பவானீஸ்வரி தான் சிபாரிசு செய்துள்ளார். அவருடைய சிபாரிசை ஏற்று முதலமைச்சர் விஜய் இந்த பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல் பவானீஸ்வரியை இந்த படைக்கு ஐஜியாகவும் நியமித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் கடந்த 14-ம்தேதி அம்மாநகர மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி மேற்பார்வையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் தனது பணியைத் தொடங்கியது. இச்சிறப்பு படையினருக்கு தேவையான நான்கு சக்கர வாகனம் சாதனங்கள், Body Worn Camera மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 'சிங்கப்பெண்' (Singapadai) சிறப்பு பிரிவினருக்கு, தனித்துவமான லோகோ (Logo) மற்றும் பிரத்யேக புதிய சீருடை தயாராகி வருவதாகத் துறை சார்ந்த உள்விவரங்கள் அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா, வருகிற 27-ம்தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு சிஙகப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விஜய் சொன்னது போலவே தொடங்கிடுச்சு..! சேலம் மாநகரில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு..!
Bhavaneeswari IPS, CM Vijay

இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிக்காக 30 ரோந்து வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com