

தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,14-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.அப்போது பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதும், திருத்தப் பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, தேர்தல் நிறைவுற்றது.
இதன் தொடர்ச்சியாகவே, நாடு முழுவதும் இந்த வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை விநியோகம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்பப் பெறும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்க முதலில் டிசம்பர் 4 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய பணியைச் செய்து முடிப்பது என்பது களத்தில் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்று தமிழக அரசு மற்றும் கேரள அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், கடுமையான காலக்கெடு நெருக்கடி, வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவங்களும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், 'டிட்வா புயல்' மற்றும் கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பல இடங்களில் படிவங்களைச் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. எனவே, கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.இந்தச் சூழல்களைக் கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம், இறுதிக் கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை ஒரு வார காலத்திற்கு (டிசம்பர் 11) நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிச.,14-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிக்க இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான்-நிக்கோபாரில் அவகாசம் நீட்டிப்பு . வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிடுவதற்கான அவகாசமும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.