விஜய் சாருக்கு வாழ்த்துகள்! திரைத்துறையிலிருந்து வந்த முதல் வாழ்த்து..!

vijay sivakarthikeyan
vijay sivakarthikeyansource:deccan chronicle
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.த.வெ.க தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் த.வெ.க தலைவர் விஜய்யை வாழ்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள்.

நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்" என்று நெகிழ்ச்சியாக வாழ்த்தியிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com